அசாமில் மின்னல் தாக்கி 18 யானைகள் பலி

அசாமில் இன்று (மே 13) மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக அம்மாநில வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.      
அசாமில் மின்னல் தாக்கி 18 யானைகள் பலி

அசாமில் இன்று (மே 13) மின்னல் தாக்கி 18 யானைகள் உயிரிழந்துள்ளன. இது தொடர்பாக அம்மாநில வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.      

அசாம் மாநிலம் நாகான் மாவட்டத்தின் பர்ஹாம்பூர் பகுதிக்குட்பட்ட மலைப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன. 

இதனிடையே இன்று பமுனி மலையடிவாரத்தில் 4 யானைகள் உயிரிழந்திருந்ததாகவும், மற்ற யானைகள் மலைக்கு மேற்புறத்தில் இறந்து கிடந்ததாகவும் உள்ளூர் மக்கள் வனத்துறைக்கு பிற்பகல் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்த வனத்துறையினர் யானைகள் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.

இதில் யானைகள் மின்னல் தாக்கி உயிரிழந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

எனினும் யானைகள் உடல்கூறு பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பிறகே முழுமையான காரணம் தெரியவரும் என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com