
மகாராஷ்டிரத்தில் 2 நக்சல்கள் சுட்டுக் கொலை
மகாராஷ்டிரத்தின் கட்சிரோலியில் மாநில காவல்துறையின் சி-60 பிரிவுடன் ஏற்பட்ட மோதலில் 2 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
கட்சிரோலி மாவட்டத்தில் தனோரா தெஹ்ஸில் வனப்பகுதியில் நக்சல்கள் பதுங்கியுள்ளதாக வந்த தகவலை அடுத்து காவல்துறையினர் அங்கு சென்றனர்.
மகாராஷ்டிரா காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் இரண்டு நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
கடந்த ஏப்ரல் 28ம் தேதி இதேபோன்ற ஒரு சம்பவம் நடந்தது, அதில், இரண்டு நக்சல்கள் காவல்துறையினருடனான மோதலில் கொல்லப்பட்டனர்.
மேலும், சம்பவ இடத்திலிருந்து சில ஆயுதங்களும் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கட்சிரோலி காவல்துறை கண்காணிப்பாளர் கோயல் தெரிவித்தார்.