
ஆந்திரத்தில் சாலை விபத்து: 4 பேர் பலி, 5 பேர் காயம்
ஆந்திரத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் பெடாபுரம் நகரில் வியாழக்கிழமை ஏற்பட்ட சாலை விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4.30 மணியளவில் பெடாபுரத்தின் தொழில்துறை பகுதியைக் கடக்கும்போது, கார் லாரியின் மீது மோதியது. இதில் ஐந்து மாத குழந்தை உள்பட ஒரு பெண் மற்றும் இரண்டு ஆண்கள் நான்கு பேர் இறந்தனர் என்று சப் இன்ஸ்பெக்டர் பாலாஜி தெரிவித்தார்.
மேலும் கார் ஓட்டுநர் உள்பட மேலும் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 3 பேர் பெடாபுரம் பகுதி மருத்துவமனைக்கும், இருவர் காக்கிநாடா அரசு மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
வீட்டு கிரகப்பிரவேச விழாவில் கலந்துகொள்வதற்காக தல்லாரேவ் மண்டலில் உள்ள டெவலசா கிராமத்திலிருந்து ராஜமுந்திரிக்கு சென்றுகொண்டிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்தியத் தண்டனைச் சட்டத்தின் ஐபிசி 337 மற்றும் 304-ஏ பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது, மேலும் விசாரணை நடந்து வருகிறது.