
மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும், கர்நாடகத்தில் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது, கேரளத்தில் ஏப்ரல் 15-ம் தேதி முதல் கரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கர்நாடகத்தில் மார்ச் மாத இறுதி முதல் கரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கரோனாவால் அதிக அளவிலானோர் பாதிக்கப்படும் மாநிலமாக மகாராஷ்டிரம் உள்ளது. ஏப்ரல் 27-ம் தேதி முதல் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வந்தாலும், குறைந்தபட்சம் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் புதிதாக பாதிக்கப்படுகின்றனர்.
மே 8-ம் தேதி முதல் ராஜஸ்தானிலும் அதிக அளவில் கரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. 150க்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் அவர் கூறினார்.