
கோப்புப்படம்
கரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வி வழங்கப்படும் என்று மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சௌஹான் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், கரோனாவால் பெற்றோர் அல்லது பாதுகாவலரை இழந்த குழந்தைகளுக்கு இலவசக் கல்வியை ஏற்படுத்தி தருவோம். மேலும் அக்குழந்தைகளுக்கு இலவசமாக ரேஷனும் மாதம்தோறும் ரூ.5,000 உதவித்தொகையும் வழங்கப்படும்.
நாங்கள் இந்த குழந்தைகளுக்கு ஆதரவளிப்போம். அவர்கள் அரசின் குழந்தைகள், அரசு அவர்களை கவனித்துக்கொள்ளும். ஆகையால் அவர்கள் கவலைப்பட தேவையில்லை என்றார். மத்தியப் பிரதேசத்தில் நேற்று மட்டும் புதிதாக 8,970 கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அதேசமயம் 84 பேர் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.