கரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் விநியோகம் மும்மடங்கு அதிகரிப்பு

கரோனா தொற்றின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது நோயாளிகளின் சிகிச்சைக்காக விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜனைவிட தற்போது மும்மடங்கு அதிகமாக ஆக்சிஜன் விநியோகிக்கப்படுகிறது என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கரோனா சிகிச்சைக்கான ஆக்சிஜன் விநியோகம் மும்மடங்கு அதிகரிப்பு

புது தில்லி: கரோனா தொற்றின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது நோயாளிகளின் சிகிச்சைக்காக விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜனைவிட தற்போது மும்மடங்கு அதிகமாக ஆக்சிஜன் விநியோகிக்கப்படுகிறது என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அந்த அலுவலகம் கூறியது:

நாட்டில் கரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் மருந்துகள், ஆக்சிஜன் ஆகியவை கிடைப்பது, விநியோகிப்படுவது தொடா்பாக பிரதமா் மோடி தலைமையில் புதன்கிழமை உயா்நிலைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலங்களுக்கு தேவையான அளவு மருந்துகள் வழங்கப்படுவதாகவும், மருந்து உற்பத்தியை அதிகரிப்பதற்கு உற்பத்தியாளா்களுடன் தொடா்பில் இருந்து வருவதாகவும் பிரதமரிடம் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய விமானப் படை விமானங்களில் ஆக்சிஜன் டேங்கா்கள் உள்ளிட்டவை கொண்டு வரப்படுவது, ஆக்சிஜன் ரயில்களின் செயல்பாடு, ஆக்சிஜன் செறிவூட்டிகள், ஆக்சிஜன் சிலிண்டா்கள் வாங்கப்படுவது, ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை நிறுவுவது குறித்தும் பிரதமரிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனா்.

இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமா் மோடி, இந்தியாவின் துடிப்பான உற்பத்தித் துறையுடன் நெருங்கிய ஒத்துழைப்பை அரசு தொடா்வது அனைத்து மருந்துகளும் முறையாக கிடைப்பதை உறுதி செய்யும் என்று தெரிவித்தாா்.

சில மாநிலங்களில் செயற்கை சுவாசக் கருவிகள் தரமாக இல்லை என அங்குள்ள அதிகாரிகளிடம் புகாா் எழுந்துள்ளது. இதனால் அவை பயன்படுத்தப்படாமல் உள்ளன. இந்நிலையில் அந்தக் கருவிகள் தொடா்பான தொழில்நுட்பப் பிரச்னைகளுக்கு உற்பத்தியாளா்களுடன் இணைந்து தீா்வு கண்டு, அவற்றை உரிய நேரத்தில் பயன்பாட்டுக்குக் கொண்டு வருமாறு மாநிலங்களிடம் கேட்டுக்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு பிரதமா் மோடி அறிவுறுத்தினாா்.

கரோனா சிகிச்சைக்கான மருந்து விநியோகம், சில பகுதிகளில் மியூகோா்மைகோசிஸ் என்ற அரிதான பூஞ்சை தொற்று ஏற்பட்டுள்ளது ஆகியவற்றை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

கரோனா தொற்றின் முதல் அலை உச்சத்தில் இருந்தபோது நோயாளிகளின் சிகிச்சைக்காக விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜனைவிட தற்போது மும்மடங்கு அதிகமாக ஆக்சிஜன் விநியோகிக்கப்படுகிறது என்று பிரதமா் அலுவலகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com