சத்தீஸ்கரில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

கரோனா பரவலை தடுக்கும் வகையில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது. 
சத்தீஸ்கரில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு 
சத்தீஸ்கரில் மே 31 வரை ஊரடங்கு நீட்டிப்பு 

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் மே 31-ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக சத்தீஸ்கர் அரசு தெரிவித்துள்ளது. 

மாநிலத்தில் உள்ள 28 மாவட்டங்களிலும் மே 15-ஆம் தேதி நள்ளிரவு முதல் இந்து ஊரடங்கு அமலுக்கு வருகின்றது. கரோனா நிலைமையைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு மாவட்டத்திலும் சில தளர்வுகள் வழங்கப்படும் என்று மக்கள் தொடர்புத் துறை அதிகாரி தெரிவித்தார். 

மேலும் அவர் கூறியதாவது, 

புதிய வழிகாட்டுதல்களின்படி, அனைத்து அரசு மற்றும் தனியார் கட்டுமான நடவடிக்கைகள் அனுமதிக்கப்படும், மேலும் அவை அனைத்து கரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் மேற்கொள்ளப்படும். 

ஞாயிற்றுக்கிழமைகளில் மருத்துவமனைகள், மருத்துவ நிறுவனங்கள், மருந்துக் கடைகள், மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். மேலும், அத்தியாவசிய பொருள்கள் ஹோம் டெலிவரி செய்ய அனுமதிக்கப்படும்.

காய்கறி சந்தைகள், திருமண மண்டபம், சினிமா அரங்குகள், மால்கள், கிளப்புகள், நீச்சல் குளங்கள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஷோரூம்கள், ஜிம்கள், மத இடங்கள், 

பயிற்சி வகுப்புகள், பள்ளிகள், கல்லூரிகள், பூங்காக்கள், மதுபானக் கடைகள் மற்றும் சாலையோர கடைகள் மூடப்படும். 

சுற்றுலா இடங்கள் மூடப்பட்டிருக்கும், பொதுக்கூட்டங்கள் தடைசெய்யப்படும், மாநில அரசின் உத்தரவுப்படி அனுமதிக்கப்பட்ட தேர்வுகள் மற்றும் ஆன்லைன் 
மூலம் நடைபெறும். ஆன்லைன் மூலம் வீட்டுக்கு மதுபானம் வழங்க அனுமதிக்கப்படும். 

இந்த தளர்வுகள் ராய்ப்பூர், துர்க் மற்றும் ராஜ்நந்த்கான் மாவட்டங்களுக்குப் பொருந்தும், மற்ற மாவட்டங்களின் சூழ்நிலைகளின் அடிப்படையில் சில தளர்வுகளை விதிக்கப்படும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com