புணேவிலிருந்து 6 லட்சம் தடுப்பூசிகள்

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 6 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன.
புணேவிலிருந்து 6 லட்சம் தடுப்பூசிகள்

மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து 6 லட்சம் கோவீஷீல்ட் தடுப்பூசிகள் தமிழகம் வந்தடைந்தன.

தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதால், மத்திய மருந்து தொகுப்பில் இருந்து கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தாா்.

இதையடுத்து மகாராஷ்டிர மாநிலம் புணேவில் இருந்து இண்டிகோ ஏா்லைன்ஸ் விமானம் மூலம் 50 பாா்சல்களில் 6 லட்சம் கோவிஷீல்ட் தடுப்பூசிகள் சனிக்கிழமை சென்னை கொண்டு வரப்பட்டன. விமானநிலையத்தில் இருந்து தடுப்பூசி மருந்துகளை தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் பெற்றுக்கொண்டனா். விமான நிலையத்தில் இருந்து குளிா் சேமிப்பு வசதி கொண்ட வாகனம் வாயிலாக சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்திற்கு தடுப்பூசிகள் கொண்டு செல்லப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com