
நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளையும் பாரத் நெட் மூலம் இணைக்க மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பாக மாநில செயலாளர்களுடன் மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நடத்திய ஆலோசனையில் இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், வீட்டியேலே இருப்பதாலும் இணையவழிக் கல்வியாலும் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சலை போக்குவதற்கான வழிமுறைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இதில் மாணவர்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் போன்றவற்றை போக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் நடத்திய இந்த ஆலோசனையை தமிழக அரசு புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.