

ஹரியாணா மாநிலத்தில் முஸ்லிம் இளைஞர் ஒருவர் மதவெறி கும்பலால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஹரியாணா மேவால் மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் ஆசிப் கான் உடற்பயிற்சிக் கூடத்தின் பயிற்சியாளர். இவர் நண்பர்களுடன் தனது வீட்டில் இருந்து சோன்ஹாவுக்கு மருந்துகள் வாங்க காரில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது எதிரே வந்த 15 பேர் கொண்ட கும்பல் அவரின் காரை நிறுத்தி அவர்களை துன்புறுத்தியுள்ளது. மேலும், 'ஜெய்ஸ்ரீ ராம்' என்று கூறச்சொல்லி அவர்களை அடித்துள்ளனர். இதில், ஆசிப் கான் அடித்து துன்புறுத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். மேலும், அவரது நண்பர்கள் இருவர் ராஷித், வாசிப் ஆகிய இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மதவெறி கும்பல், காரை நிறுத்தி காரில் மேல் கற்களை எறிந்துள்ளனர். இதில் நண்பர்கள் இருவரும் தப்பித்து ஓடவே, ஆசிப் கான் மட்டும் அவர்களிடம் சிக்கியதாகவும் மேலும் ஆசிப்புக்கும் அங்குள்ள இந்து மத கும்பலுக்கும் முன்விரோதம் இருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வழக்குப்பதிவு செய்தும் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.