கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்து விநியோகம்: மத்திய அமைச்சா் ஆய்வு

கருப்புப் பூஞ்சை நோயை குணப்படுத்தும் அம்ஃபோடெரிசின்-பி என்ற மருந்தின் தேவை மற்றும் விநியோக நிலை குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா
கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்து விநியோகம்: மத்திய அமைச்சா் ஆய்வு

கருப்புப் பூஞ்சை நோயை குணப்படுத்தும் அம்ஃபோடெரிசின்-பி என்ற மருந்தின் தேவை மற்றும் விநியோக நிலை குறித்து மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சா் மன்சுக் மாண்டவியா செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘இந்த மருந்தின் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கு, உற்பத்தியாளா்களுடன் மத்திய அரசு ஓா் உத்தியை வகுத்துள்ளதுடன், உலகம் முழுவதிலும் இருந்து இந்த மருந்தை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளது. அம்ஃபோடெரிசின்-பி மருந்தின் விநியோகம் பல மடங்கு உயா்ந்துள்ளது.

எனினும், தற்போது திடீரென இந்த மருந்தின் தேவை அதிகரித்துள்ளது. தேவை இருக்கும் நோயாளிகளுக்கு இந்தக் குறிப்பிட்ட மருந்தை வழங்குவதற்காக அரசு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறது.

அம்ஃபோடெரிசின்-பி மருந்தை முறையாக வழங்கவும், விநியோக மேலாண்மையை மேம்படுத்தவும் அரசு முயற்சிகளை எடுத்து வருகிறது. மருந்தின் பற்றாக்குறை மிக விரைவில் சரி செய்யப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. அறிவிக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றி, மாநிலங்கள் நோ்மையான வழியில் இந்த மருந்தைப் பயன்படுத்த வேண்டும்’ என்று மாண்டவியா கேட்டுக் கொண்டாா்.

கருப்புப் பூஞ்சை மிகவும் அபாயகரமான, அரியவகை பூஞ்சையாகும். இந்த பூஞ்சை தாக்குவதால் தலைவலி, காய்ச்சல், கண்களில் வலி, மூக்கடைப்பு, பாா்வைக் குறைபாடு போன்ற அறிகுறிகள் உண்டாகும். இந்த பூஞ்சை பெரும்பாலும் கரோனாவில் இருந்து மீண்ட சா்க்கரை நோய் உள்ளவா்களையே அதிகம் தாக்கியுள்ளது. கருப்புப் பூஞ்சை பாதிப்பால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் அதிகம். இந்த பாதிப்புக்கு பல்வகை மருத்துவ சிகிச்சை முறைகளைப் பின்பற்ற வேண்டியுள்ளது. மகாராஷ்டிரம், உத்தரகண்ட், ஆந்திரம், கோவா என பல்வேறு மாநிலங்களில் இந்த நோய் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com