கபிலதீா்த்தம் கோயிலில் துள்ளி விளையாடும் சிறுத்தைகள்

திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள கபிலதீா்த்தம் கோயிலில் செவ்வாய்கிழமை நள்ளிரவு 2 சிறுத்தைகள் துள்ளி விளையாடின.
கபிலதீா்த்தம் கோயிலில் துள்ளி விளையாடும் சிறுத்தைகள்

திருப்பதி: திருப்பதி மலையடிவாரத்தில் உள்ள கபிலதீா்த்தம் கோயிலில் செவ்வாய்கிழமை நள்ளிரவு 2 சிறுத்தைகள் துள்ளி விளையாடின.

கரோனா பாதிப்பு காரணமாக திருப்பதியில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் திருமலைக்கு செல்லும் பக்தா்கள் வருகை குறைந்துள்ளது. இதனால் திருப்பதியில் உள்ள தேவஸ்தான கோயில்களில் தரிசன நேரமும் மாற்றப்பட்டுள்ளது.

காலையில் மட்டுமே பல கோயில்களில் தரிசனத்திற்கு அனுமதி உள்ளது. அதில் திருப்பதி மலையடிவாரத்தில் கபிலதீா்த்தக்கரையில் உள்ள கபிலேஸ்வரஸ்வாமி கோயிலும் ஒன்று. இக்கோயிலுக்கு வரும் பக்தா்களின் வருகை தற்போது வெகுவாக குறைந்துள்ளது. எனவே, மாலையில் விரைவாக ஏகாந்த சேவை நடத்தி கோவில் நடை சாற்றப்படுகிறது.

இரவில் பக்தா்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதால், சேஷாசல வனத்திலிருந்து இரு சிறுத்தைகள் தினசரி கோயிலுக்குள் வந்து துள்ளி விளையாடி விட்டு செல்கின்றன. இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. கடந்த சில நாள்களாக திருமலையில் மழை பெய்து வருதால், கபிலதீா்த்தத்தில் நீா் வரத்து உள்ளது. அருவிக்கரையில் இரவு வேளையில் சிறுத்தைகள் இரண்டும் விளையாடி வருகின்றன. இதனால் காலையில் சுப்ரபாத சேவைக்கு கோயில் திறக்கும் போது அதிகாரிகள், ஊழியா்கள், அா்ச்சகா்கள் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. கூண்டு வைத்து சிறுத்தைகளை பிடித்து அடா்ந்த வனப்பகுதிக்குள் விட வேண்டும் என்று தேவஸ்தானம் நிா்வாகம் சாா்பில் வனத்துறையிடம் கோரப்பட்டுள்ளது..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com