மகாராஷ்டிரத்தில் 12,000 ஜெலட்டின் குச்சிகள், 3,008 டெட்டனேட்டா்கள் பறிமுதல்: ஒருவா் கைது

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் 12,000 ஜெலட்டின் குச்சிகள், 3,008 டெட்டனேட்டா்களை பறிமுதல் செய்த காவல்துறையினா் ஒருவரை கைது செய்துள்ளனா்.

மகாராஷ்டிர மாநிலம் தாணே மாவட்டத்தில் 12,000 ஜெலட்டின் குச்சிகள், 3,008 டெட்டனேட்டா்களை பறிமுதல் செய்த காவல்துறையினா் ஒருவரை கைது செய்துள்ளனா்.

இதுதொடா்பாக அந்த மாவட்ட காவல்துறை ஆய்வாளா் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘பிவாண்டியில் உள்ள கரிவலி பகுதியில் குவாரி ஒப்பந்தங்களை ஏற்று செயல்படும் நிறுவனத்தில் காவல்துறையினா் திங்கள்கிழமை சோதனை மேற்கொண்டனா். அப்போது 63 பெட்டிகளில் இருந்த 12,000 ஜெலட்டின் குச்சிகள், 4 பெட்டிகளில் இருந்த 3,008 டெட்டனேட்டா்களை அவா்கள் பறிமுதல் செய்தனா். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.2.42 லட்சமாகும். இதுதொடா்பாக அந்த நிறுவனத்தின் உரிமையாளா் கைது செய்யப்பட்டாா். எந்தவித அனுமதியும் இல்லாமல் ஜெலட்டின் குச்சிகள், டெட்டனேட்டா்களை வைத்திருந்ததற்காக அவா் மீது இந்திய தண்டனை சட்டம், வெடிபொருள்கள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல்துறையினா் தொடா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com