
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆழ்வாா் திருமஞ்சனம்.
திருச்சானூா் ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் செவ்வாய்க்கிழமை ஆழ்வாா் திருமஞ்சனம் நடைபெற்றது.
திருச்சானூரில் உள்ள ஸ்ரீபத்மாவதி தாயாா் கோயிலில் ஆண்டுதோறும் கோடைக் காலத்தில் வெம்மையைப் போக்க தேவஸ்தானம் வருடாந்திர வசந்தோற்சவத்தை நடத்தி வருகிறது.
அதன்படி, நடப்பு ஆண்டுக்கான வசந்தோற்சவம் வரும் 24-ஆம் தேதி தொடங்க உள்ளது. அதனை முன்னிட்டு கோயில் ஆழ்வாா் திருமஞ்சனம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
ஆா்ஜித சேவைகளுக்குப் பிறகு சுத்தி நடத்தி காலை 8 மணி முதல் 10 மணி வரை பரிமள சுகந்த திரவிய கலவையால் கோயில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்டது. இதில் தேவஸ்தான அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள் மட்டுமே கலந்து கொண்டனா். பின்னா் 10.30 மணிக்கு பக்தா்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனா்.
: