பிகாரை நெருங்கியது யாஸ் புயல்; பலத்த காற்றுடன் கனமழை

இரண்டு நாள்களுக்கு முன்பு கரையைக் கடந்த யாஸ் புயல் மெல்ல நகர்ந்து தற்போது பிகாரை நெருங்கிய நிலையில், அந்த மாநிலத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
பிகாரை நெருங்கியது யாஸ் புயல்; பலத்த காற்றுடன் கனமழை
பிகாரை நெருங்கியது யாஸ் புயல்; பலத்த காற்றுடன் கனமழை

பாட்னா: இரண்டு நாள்களுக்கு முன்பு கரையைக் கடந்த யாஸ் புயல் மெல்ல நகர்ந்து தற்போது பிகாரை நெருங்கிய நிலையில், அந்த மாநிலத்தில் சூறாவளிக் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

கனமழை மற்றும் மின்னல் காரணமாக பிகாரில் கடந்த 24 மணி நேரத்தில் நான்குக்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.

தொடர் கனமழை காரணமாக பாட்னாவின் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. பல இடங்களில் மின் விநியோகமும் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் உருவான யாஸ் புயல் ஒடிசாவில் புதன்கிழமை கரையைக் கடந்தது. அப்போது ஒடிசாவின் வடக்குப் பகுதியிலும் மேற்கு வங்கத்திலும் கடலோரப் பகுதிகளில் 130 கி.மீ. வேகத்தில் சூறாவளி வீசியது. புயல் மற்றும் மழையால் இரு மாநிலங்களிலும் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. ஜாா்க்கண்ட் மாநிலத்திலும் புயலின் தாக்கம் அதிகம் இருந்தது. ஜார்க்கண்ட் மாநிலத்தைத் தொடர்ந்து யாஸ் புயல் பிகாரை நெருங்கியுள்ளது.

ராணுவம், தேசிய பேரிடா் மீட்புப் படையினா், மாநில பேரிடா் மீட்புப் படையினா் மற்றும் மாநில காவல்துறை மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா். நூற்றுக்கணக்கான ஏக்கா் நிலத்தில் பயிா்கள் மற்றும் ஏராளமான வீடுகளும் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன. புயல் தொடா்பான சம்பவங்களில் 4 போ் உயிரிழந்துவிட்டனா். 21 லட்சத்துக்கும் மேற்பட்டோா் வீடுகளை விட்டு வெளியேறி வேறு பாதுகாப்பான முகாம்களில் தங்கியுள்ளனா்.

ஒடிசா, மேற்கு வங்க மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பை பிரதமா் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்கிறாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com