கேரளத்தில் தளர்வுகளுடன் பொது முடக்கம் நீட்டிப்பு

கேரளத்தில் ஜூன் 9-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கேரளத்தில் ஜூன் 9-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய பொது முடக்கம் நீட்டிக்கப்படுவதாக முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.

இதுபற்றி பினராயி விஜயன் தெரிவித்தது:

"கேரளத்தில் கரோனா பரவல் குறைந்து வருகிறது. தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் சனிக்கிழமை 16.59 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது. கடந்த 3 நாள்களாக தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் விகிதம் சராசரியாக 20 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.

இந்த மாத தொடக்கத்தில் பொது முடக்கத்தை அமல்படுத்தும்போது நோய்த் தொற்றுக்கான சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கையை 2.50 லட்சத்துக்கும் கீழ் குறைப்பதே இலக்காக இருந்தது. அதை நேற்று அடைந்துவிட்டோம். 

தற்போதைய சூழலைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை நாம் எச்சரிக்கையுடனே இருக்க வேண்டும். அதனால், ஜூன் 9-ம் தேதி வரை பொது முடக்கத்தை நீட்டிக்க முடிவு செய்துள்ளோம். இருந்தபோதிலும் சில தளர்வுகள் இருக்கும்.  

திங்கள், புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வங்கிகள் முழுநாள் செயல்படும். நகைக் கடைகள், துணிக் கடைகள் மற்றும் புத்தகக் கடைகள் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் செயல்படும். 

முழு தளர்வுகளை அறிவிக்க வேண்டுமெனில், தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுவோர் விகிதம் மேலும் குறைய வேண்டும். தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படும் மூன்று நாள் விகிதம் 15 சதவிகிதத்துக்கும் கீழ் குறைய வேண்டும். இதுமட்டுமில்லாது தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் பயன்பாடு 60 சதவிகிதத்துக்கும் கீழ் குறைய வேண்டும். சனிக்கிழமை நிலவரப்படி இது 70 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது. 

இதற்கு முன்பு முழுமையான தளர்வுகளை அறிவித்தால் அது மேலும் பிரச்னைகளை உண்டாக்கும். எனவே, சற்று காத்திருக்க வேண்டியுள்ளது" என்றார் பினராயி விஜயன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com