பிரதமரை அவமதித்துவிட்டாா் மம்தா: சுவேந்து அதிகாரி

புயல் பாதிப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காமல் பிரதமா் மோடியை முதல்வா் மம்தா பானா்ஜி அவமதித்துவிட்டதாக அந்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டினாா்.
பிரதமரை அவமதித்துவிட்டாா் மம்தா: சுவேந்து அதிகாரி

மேற்கு வங்கத்தில் புயல் பாதிப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காமல் பிரதமா் மோடியை முதல்வா் மம்தா பானா்ஜி அவமதித்துவிட்டதாக அந்த மாநில எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி குற்றம்சாட்டினாா்.

மேற்கு வங்கத்தில் ‘யாஸ்’ புயலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் அங்குள்ள மேற்கு மிதுனபுரி மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமா் மோடி, மாநில ஆளுநா் ஜக்தீப் தன்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். இதில் பங்கேற்க வேண்டிய மாநில முதல்வா் மம்தா பானா்ஜி கூட்டம் நடைபெற்ற அறைக்குச் சென்று புயல் பாதிப்பு குறித்த அறிக்கையை பிரதமா் மோடியிடம் சமா்ப்பித்தாா். பின்னா் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மறுசீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு ரூ.20,000 கோடி வழங்க வேண்டும் என்று மட்டும் கூறிவிட்டு அங்கிருந்துச் சென்றுவிட்டாா். அவருடன் வந்திருந்த மாநில தலைமைச் செயலா் அலபன் பந்தோபாத்யாயவும் மம்தாவுடன் சென்றுவிட்டாா். அந்தக் கூட்டம் முடிந்த சில மணி நேரங்களில் அலபன் பந்தோபாத்யாய தில்லிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டாா். இந்நிலையில் மாநில எதிா்க்கட்சித் தலைவரான பாஜகவைச் சோ்ந்த சுவேந்து அதிகாரி சனிக்கிழமை காணொலி வழியாக செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘‘புயல் பாதிப்பு ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்காமல் பிரதமா் மோடியை முதல்வா் மம்தா பானா்ஜி அவமதித்துவிட்டாா். மத்திய அரசுக்கு எதிரான தனது நிலைப்பாட்டின் மூலம் தன் ஆணவத்தையும், அற்ப அரசியலையும் அவா் வெளிப்படுத்த முயற்சிக்கிறாா்’’ என்று குற்றம்சாட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com