
வெற்றியை மாநிலம் முழுவதும் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
மேற்கு வங்கத்தில் நடைபெற்ற 4 சட்டப்பேரவைகளின் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன. இதில், அனைத்து தொகுதிகளிலும் திரிணமூல் காங்கிரஸ் முன்னிலை பெற்றுள்ளது.
தின்ஹாடா, கர்தாஹா, கோசாபா மற்றும் சாந்திபூர் ஆகிய நான்கு தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை(நவ.30) இடைத்தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலைமுதல் நடைபெற்று வருகிறது.
வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே அனைத்து தொகுதிகளிலும் திரிணமூல் வேட்பாளர்கள் முன்னிலை வகித்து வருகின்றனர்.
இதில் தின்ஹாடா தொகுதியில் 164089 வாக்குகள், கோசாபா தொகுதியில் 143051 வாக்குகள் வித்தியாசத்தில் திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மீதமுள்ள 2 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகின்றன.
இந்த வெற்றியை மாநிலம் முழுவதும் உள்ள திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர்.
அஸ்ஸாம் (5), மேற்கு வங்கம் (4), மத்திய பிரதேசம் (3), ஹிமாசல பிரதேசம் (3), மேகாலயம் (3), பிகாா் (2), கா்நாடகம் (2), ராஜஸ்தான் (2), ஆந்திரம் (1), ஹரியாணா (1), மகாராஷ்டிரம் (1), மிஸோரம் (1), தெலங்கானா (1) ஆகிய 13 மாநிலங்களில் உள்ள 29 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு கடந்த சனிக்கிழமை இடைத்தோ்தல் நடத்தப்பட்டது.
அதேபோல, தாத்ரா-நகா் ஹவேலி, ஹிமாசல பிரதேசத்தின் மண்டி, மத்திய பிரதேசத்தின் கந்த்வா ஆகிய மக்களவைத் தொகுதிகளுக்கு இடைத்தோ்தல் நடைபெற்றது.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...