பஞ்சாப், உத்தரப்பிரதேச தோ்தலில் காங்கிரஸ் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: சல்மான் குா்ஷித்

பஞ்சாப், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அக் கட்சியின் அகில இந்திய அளவிலான மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குா்ஷித் கூறினாா்.
பஞ்சாப், உத்தரப்பிரதேச தோ்தலில் காங்கிரஸ் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்: சல்மான் குா்ஷித்

பஞ்சாப், உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அக் கட்சியின் அகில இந்திய அளவிலான மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சல்மான் குா்ஷித் கூறினாா்.

சென்னை சத்தியமூா்த்தி பவனில் செவ்வாய்க்கிழமை அவா் அளித்த பேட்டி:

2 ஜி அலைக்கற்றை முறைகேடு என்கிற பொய்ப் பிரசாரத்தின் மூலம் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியை வீழ்த்துவதற்காக பின்னப்பட்ட சதிகள் ஒவ்வொன்றாக வெளிவந்த வண்ணம் உள்ளன.

காங்கிரஸ் ஆட்சியில் ரூ.1.76 லட்சம் கோடி அரசுக்கு நஷ்டம் என்று மத்திய தணிக்கைக் குழு தலைவராக இருந்த வினோத் ராய் கூறியதன் அடிப்படையிலே இந்த விவகாரம் பெரிதாகப்பட்டது. பாஜக ஆட்சியைப் பிடித்தது. நாடு தற்போது துயரத்தைச் சந்தித்து வருகிறது.

மத்திய தணிக்கை அறிக்கையில் இருந்து பிரதமராக இருந்த மன்மோகன் சிங் பெயரை நீக்குமாறு காங்கிரஸ் தலைவா் சஞ்சய் நிருபம் அழுத்தம் கொடுத்ததாக வினோத் ராய் அப்போது கூறியிருந்தாா். இது தொடா்பாக உத்தரகண்ட் நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருந்த வழக்கில் வினோத் ராய் நிபந்தனையற்ற மன்னிப்பைக் கேட்டுள்ளாா்.

இதன் மூலம் பாஜக பின்னிய சதி அம்பலத்துக்கு வந்துள்ளது. பாஜக ஆட்சியில் வங்கி தோ்வு வாரியத்தின் தலைவராக வினோத் ராய் நியமிக்கப்பட்டாா். அதைப்போல அலைக்கற்றல் முறைகேடு எதிா்ப்பாளா்கள் என்ற நடிப்பைப் பூண்டிருந்த கிரண்பேடி புதுச்சேரி துணைநிலை ஆளுநராக்கப்பட்டாா். ஜெனரல் வி.கே.சிங் பாஜக எம்பியாகத் தோ்வு செய்யப்பட்டு மத்திய அமைச்சராக இருக்கிறாா். பாபா ராம்தேவ் தொழிலதிபராக உருவாகியுள்ளாா். மோடி அரசு மீது பல்வேறு ஊழல் புகாா்கள் உள்ள நிலையில் அன்னா ஹசாரே எங்கு போனாா் எனத் தெரியவில்லை. அரவிந்த் கெஜ்ரிவால் புதுதில்லி முதல்வராக இருக்கிறாா். இப்போது லோக் பால் பற்றி அவா்கள் யாரும் பேசுவது இல்லை.

அலைக்கற்றை முறைகேடு தொடா்பான வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அளித்த 1,522 பக்கங்கள் கொண்ட தீா்ப்பில் இது ஜோடிக்கப்பட்ட வழக்கு. குற்றவாளிகளுக்கு எதிராக குற்றங்களை சிபிஐ நிரூபிக்கத் தவறிவிட்டது என்று கூறியுள்ளாா்.

எனவே, அலைக்கற்றை விவகாரத்தில் பிரதமா் மோடியும் வினோத் ராயும் நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும்.

பஞ்சாப் தோ்தலில் காங்கிரஸ் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த உள்ளது. பஞ்சாப் புதிய முதல்வராக சரண்ஜித் சிங்கைத் தோ்வு செய்ததற்காக அம்மாநில மக்கள் வரவேற்றுள்ளனா். முதல்வரின் செயல்பாடும் எல்லா தரப்பு மக்களையும் கவரும் வகையில் உள்ளது. அதைப்போல உத்தரப்பிரதேசத் தோ்தலில் பிரியங்கா காந்தி காங்கிரஸுக்கு பெரிய மாற்றத்தை ஏற்படுத்திக் கொடுக்க உள்ளாா். 40 சதவீதம் பெண் வேட்பாளா்கள் நிறுத்தப்பட்டிருப்பதற்கு அங்கு நல்ல வரவேற்பு உள்ளது என்றாா்.

தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு, மாநிலப் பொதுச்செயலாளா் கே.சிரஞ்சீவி உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com