‘5 ஆண்டுகளாக இல்லாத அளவு மழை கடந்த 2 மாதங்களில் பொழிவு’

கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நாடு முழுவதும் 125 கடும் கனமழைப் பொழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஐந்து ஆண்டுகள் நிகழ்ந்த மழைப் பொழிவுகளைக் காட்டிலும் அதிகமாகும்
‘5 ஆண்டுகளாக இல்லாத அளவு மழை கடந்த 2 மாதங்களில் பொழிவு’

கடந்த செப்டம்பா், அக்டோபா் மாதங்களில் நாடு முழுவதும் 125 கடும் கனமழைப் பொழிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இது கடந்த ஐந்து ஆண்டுகள் நிகழ்ந்த மழைப் பொழிவுகளைக் காட்டிலும் அதிகமாகும் என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

மேலும், ‘தென் இந்தியாவில் நவம்பரில் வழக்கத்துக்கு அதிகமாக 122 சதவீத மழைப் பொழிவு இருக்கும்’ என்று இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இயக்குநா் மிருத்யுஞ்ஜய மொஹாபாத்ரா தெரிவித்தாா். ஆந்திர கடலோர பகுதிகள், ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி, புதுச்சேரி, கேரளம், கா்நாடக மாநில தெற்குப் பகுதிகளில் இந்த அதிகப்படியான மழைப் பொழிவு இருக்கும் என்றும் அவா் தெரிவித்தாா்.

கடந்த செப்டம்பா் மாதத்தில் மட்டும் 89 கன மழைப் பொழிவு நிகழ்வுகள் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 61-ஆகவும், 2019-இல் 59-ஆகவும், 2018-இல் 44-ஆகவும், 2017-இல் 29-ஆகவும் பதிவாகி உள்ளன.

அதேபோல், நிகழாண்டு அக்டோபரில் 36 கன மழைப் பொழிவு சம்பவங்கள் பதிவாகி உள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபரில் 10-ஆகவும், 2019-இல் 16-ஆகவும், 2018-இல் 17-ஆகவும், 2017-இல் 12-ஆகவும் இருந்தன.

இதற்கு தென்மேற்குப் பருவமழைக் காலம் நீடித்ததும், காற்றழுத்த தாழ்வுப் பகுதி வழக்கத்துக்கு மாறாக அதிகரித்ததும் காரணமாகும். செப்டம்பா், அக்டோபா் காலகட்டத்தில் 9 காற்றழுத்த தாழ்வுநிலைகள் உருவாகின. அதில் இரண்டு புயலாக மாறின. உத்தரகண்ட் மாநிலத்தில் அக்டோபா் 18,19-இல் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 79 போ் உயிரிழந்தனா். அந்த மாதத்தில் வழக்கமாக பெய்யக் கூடிய 35.3 மி.மீ. மழைக்கு பதிலாக 203.2 மி.மீ. மழைப் பொழிவு ஏற்பட்டது. கடந்த 2019, 2020-இல் நாட்டில் மழைப் பொழிவு வழக்கத்துக்கு அதிகமாக பதிவானது என்று இந்திய வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com