தில்லியில் காற்றின் தரக் குறியீடு 382-ஆக அதிகரிப்பு: சுவாசக் கோளாறுகளால் அவதிப்படும் மக்கள்!

தேசிய தலைநகா் தில்லியில் காற்றின் தரக்குறியீடு 382 ஆக அதிகரித்துள்ளதையடுத்து, காற்றின் தரம் 'மிக மோசம்' என்ற பிரிவுக்குச் சென்றது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தலைநகர் தில்லியில் காற்றின் தரக்குறியீடு 382 ஆக அதிகரித்துள்ளதையடுத்து, காற்றின் தரம் 'மிக மோசம்' என்ற பிரிவுக்குச் சென்றது. 

கரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்த சூழ்நிலையில் தில்லியில் கடந்த ஆண்டு காற்றின் தரம் மேம்பட்டது. தற்போது படிப்படியாக இயல்பு நிலை திரும்பி வரும் நிலையில் வாகனங்களின் செயல்பாட்டினாலும் அண்டை மாநிலங்களில் பயிர்கழிவுகள் எரிக்கப்படுவதாலும் காற்றின் தரம் மோசமாகி வருகிறது. 

அதே நேரத்தில் காற்றின் மிக நுண்ணிய துகள்களான பி.எம். 2.5 துகள்களின் செறிவு குறைந்து வருவதாலும் காற்றின் திசையாலும் வரும் நாள்களில் காற்றின் தரம் சற்று மேம்படலாம் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

எனினும் தற்போது காற்றின் தரக்குறியீடு 382 ஆக அதிகரித்துள்ளதையடுத்து, காற்றின் தரம் 'மோசம்'(Poor) என்ற பிரிவிலிருந்து 'மிக மோசம்'(very poor) என்ற பிரிவுக்குச் சென்றது. 

காற்று மாசு அதிகரித்துள்ளதால் உடல்நலக்குறைவு அதிகரித்து வருவதாக தில்லி மக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். சுவாசக் கோளாறுகளால் பலரும் பாதிக்கப்பட்டு வருவதால் பலரும் வீட்டைவிட்டு வெளியேற வருவதற்கு அச்சப்படுவதாகக் கூறுகின்றனர். 

தில்லியில் தற்போது சைக்கிள் பயன்பாடு குறைந்து பைக், கார் உள்ளிட்ட வாகனங்களின் பயன்பாடு அதிகரித்துக் காணப்படுவதும் தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதும் பயிர்கள் எரிக்கப்படுவதும் காற்று மாசு உயர்வுக்கு காரணம் என்று அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com