கிழிந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு கிடைக்கும்?

கிழிந்த அல்லது சிதைந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது மற்றும் அதற்கு மதிப்பாக எவ்வளவு தொகை திரும்பக் கிடைக்கும் என்பது குறித்து  ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகளுக்கு பணம் திரும்ப அளிப்பது குறித்த
கிழிந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு கிடைக்கும்?
கிழிந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது? எவ்வளவு கிடைக்கும்?


கிழிந்த அல்லது சிதைந்த ரூபாய் நோட்டுகளை எப்படி மாற்றுவது மற்றும் அதற்கு மதிப்பாக எவ்வளவு தொகை திரும்பக் கிடைக்கும் என்பது குறித்து  ரிசர்வ் வங்கியின் ரூபாய் நோட்டுகளுக்கு பணம் திரும்ப அளிப்பது குறித்து விதிமுறையில் விளக்கப்பட்டுள்ளது.

கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகள் உள்ளனவா? அந்த ரூபாய் நோட்டை பொதுவெளியில் கடைகளிலோ அல்லது வேறு எங்குமோ கொடுக்க முடியாத நிலையில் உள்ளதா? அதனை வைத்துக் கொண்டு என்ன செய்வது என்று தெரியவில்லை?

கவலை வேண்டாம்.. அதுபோன்ற கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்வது குறித்து இந்திய வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தலை வெளியிட்டுள்ளது.

இதுவரை, மாநகரின் தலைநகரங்களில் இருக்கும் ரிசர்வ் வங்கியில் மட்டுமே கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியும். இதனால், நகரப் பகுதிகளிலிருப்போரே அங்குச் சென்று மாற்றுவது கடினமாக இருந்தது. கிராமப்புற மக்களைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஒரு சில ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக அவர்கள் கிராமத்திலிருந்து பயணித்து நகரப்பகுதிக்குச் செல்ல முடியுமா? 

இதன் காரணமாக மக்கள் மட்டுமல்ல, புழக்கத்தில் இருக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு குறிப்பிட்ட சதவீத நோட்டுகள் கிழிந்து பயன்பாட்டில் இல்லாமல் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டது.

இதற்கு பல்வேறு பகுதிகளிலிருந்து கோரிக்கைகள் வந்த நிலையில், ரிசர்வ் வங்கி, அனைத்து வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளிலும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்து இருந்தது.

ஆனால் கரோனா பொதுமுடக்கம் காரணமாக அந்த நடைமுறை வங்கிகளால் பின்பற்றப்படவில்லை. இந்த நிலையில், அதனை நடைமுறைப்படுத்துமாறு அனைத்து வங்கிகளுக்கும் இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல் அறிக்கையை அனுப்பியுள்ளது.

இதன் மூலம் கைவசமிருக்கும் கிழிந்த ரூபாய் நோட்டுகளை உங்கள் பகுதிக்கு அருகேயிருக்கும் எந்தவொரு வங்கியிலும் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம். அதற்கு தற்போது வழிவகைக் காணப்பட்டுள்ளது. இதனால், பெருவாரியான மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திரும்ப செலுத்துவதற்கான மூன்றாம் விதி, 2009-ன்படி உள்பட்டு, ஒரு கிழிந்த அல்லது சேதமடைந்த ரூபாயின் தன்மையை கருத்தில் கொண்டு அதன் முழு மதிப்பு அல்லது பாதி மதிப்பை இந்திய வங்கிகள் வழங்கும்.

எந்த வகையில் கிழிந்த அல்லது சேதமடைந்த இந்திய ரூபாய் நோட்டுகள் மாற்றப்படும் அல்லது மாற்றப்படாது? ரூபாய் நோட்டுகள் மதிப்பை திரும்ப செலுத்தும் விதி (என்ஆர்ஆர்) சொல்வது என்ன?

என்ஆர்ஆர் விதி 2018ன் படி: 
1. 2 ரூபாய் மதிப்புள்ள நோட்டுகள் வரை

  • ஒரு ரூபாய் நோட்டின் இரண்டாக கிழிக்கப்படாத, மிகப்பெரிய பகுதி அதாவது 50 சதவீதத்துக்கும் மேலான பகுதி வங்கியில் செலுத்தப்பட்டால் அதற்கு முழு மதிப்பையும் திரும்ப அளிக்கலாம்.
     
  • ஒரு ரூபாய் நோட்டின் இரண்டாக கிழிக்கப்படாத பகுதி ஆனால் 50 சதவீதத்துக்கும் குறைவான அளவில் வங்கியில் செலுத்தப்பட்டால் அதனை நிராகரிக்கலாம்.

2. 50 ரூபாய் மற்றும் அதற்கு மேற்பட்ட ரூபாய் நோட்டுகள்

  • ஒரு ரூபாய் நோட்டின் இரண்டாக கிழிக்கப்படாத பகுதி ஆனால் 40 சதவீதத்துக்கும் குறைவான அளவில் வங்கியில் செலுத்தப்பட்டால் அதனை நிராகரிக்கலாம்.
     
  • ஒரு ரூபாய் நோட்டின் இரண்டாக கிழிக்கப்படாத பகுதி ஆனால் 40 சதவீதத்திலோ அல்லது 80 சதவீதத்துக்குக் குறைவான அளவில் வங்கியில் செலுத்தப்பட்டால்  அதற்கு பாதித் தொகையை திரும்ப அளிக்கலாம்.
     
  • ஒரு ரூபாய் நோட்டின் இரண்டாக கிழிக்கப்படாத பகுதி 80 சதவீதத்துக்கும் மேலான அளவில் வங்கியில் செலுத்தப்பட்டால் அதற்கு முழு தொகையை அளிக்கலாம்.

வங்கிக்கு வரும் ரூபாய் நோட்டு, பணப்புழக்கத்துக்கு உகந்ததல்ல என்று கண்டறியப்பட்டால், அதனை வங்கி தக்கவைத்துக் கொண்டு, அதனை இந்திய ரிசர்வ் வங்கிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அது இந்திய ரிசர்வ் வங்கியால் அழிக்கப்படும்.

கிழந்த அல்லது சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் மாற்ற இயலுமா?

மண் அல்லது சேறால் கறைபடிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கியிலும் செலுத்தி முழு மதிப்பைப் பெற்றுக் கொள்ளலாம். அதேவேளையில், இதுபோன்ற ரூபாய் நோட்டுகளை மாற்ற அந்த வங்கியின் வாடிக்கையாளராக இருக்க வேண்டியது அவசியமில்லை. வாடிக்கையாளர் அல்லாதவர்களும் மாற்றிக் கொள்ளலாம்.

நாட்டிலுள்ள அனைத்து அங்கீகாரம் பெற்ற வங்கிகளும் ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ளலாம். ஆனால், சிறிய நிதி வங்கிகள் மட்டும் பணத்தை மாற்றிக் கொள்வது அவர்களது விருப்பத்தில் விடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com