மேற்கு வங்கம்: இரு வங்கதேச கடத்தல்காரர்கள் சுட்டுக்கொலை
இந்திய - வங்கதேச எல்லையில் இன்று அதிகாலை கால்நடைகளை கடத்த முயன்ற இரண்டு வங்கதேச கடத்தல்காரர்களை எல்லைப் பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர்.
இதுகுறித்து எல்லைப் பாதுகாப்புப் படை வெளியிட்ட செய்தியில்,
மேற்கு வங்க மாநிலத்தில் கூச் பிஹாரில் உள்ள இந்திய எல்லைப் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் வங்கதேசத்தை சேர்ந்த இருவர்கள் மூங்கில் கம்புகளை கொண்டு கால்நடைகளை திருட முயற்சித்தனர்.
இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையினர் அவர்களை திரும்ப செல்லுமாறு எச்சரித்தபோது வீரர்கள் மீது இரும்பு கம்பிகளை கொண்டு வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு வீரருக்கு காயம் ஏற்பட்டது.
இதையடுத்து எல்லைப் பாதுகாப்புப் படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு கடத்தல்காரர்களும் கொல்லப்பட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.