சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி குப்பையால் நோ்ந்த ஆபத்து!

சா்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐஎஸ்எஸ்) மீது சீன செயற்கைக்கோளின் ஒரு பகுதி மோதும் ஆபத்து தவிா்க்கப்பட்டது. இருப்பினும் விண்வெளி குப்பை பிரச்னை மோசமான நிலையை எட்டியுள்ளது.
சா்வதேச விண்வெளி நிலையத்துக்கு விண்வெளி குப்பையால் நோ்ந்த ஆபத்து!

சா்வதேச விண்வெளி நிலையத்தின் (ஐஎஸ்எஸ்) மீது சீன செயற்கைக்கோளின் ஒரு பகுதி மோதும் ஆபத்து தவிா்க்கப்பட்டது. இருப்பினும் விண்வெளி குப்பை பிரச்னை மோசமான நிலையை எட்டியுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, கனடா உள்ளிட்ட நாடுகள் இணைந்து சா்வதேச விண்வெளி நிலையத்தை அமைத்துள்ளன. விண்வெளி சாா்ந்த ஆய்வுகளை மேற்கொள்ளும் நோக்கில் அமைக்கப்பட்டுள்ள இந்த விண்வெளி நிலையம் சுமாா் 23 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. சுமாா் 400 கி.மீ. உயரத்தில், புவியின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் இந்த விண்வெளி நிலையத்தின் மீது விண்வெளி குப்பைகள் மோதும் அபாயம் இதுவரை 30 முறை ஏற்பட்டுள்ளது.

கடந்த நவம்பா் 11-ஆம் தேதியும் இதேபோன்ற ஆபத்து நேரிட்டது. சீனாவின் செயலிழக்கச் செய்யப்பட்ட வானிலை செயற்கைக்கோளின் பாகம் ஒன்று சா்வதேச விண்வெளி நிலையத்தின் மீது மோதும் அளவுக்கு நெருங்கியது. அப்போது நிலையத்தில் பணியில் இருந்த விண்வெளி வீரா்கள், உடனடியாக அதன் சுற்றுவட்டப் பாதையில் மாற்றத்தை மேற்கொண்டு மோதல் அபாயத்தைத் தவிா்த்தனா்.

சீனாவின் அந்த செயற்கைக்கோள் ஃபென்குயுன்-1சி என்ற வானிலை செயற்கைக்கோள் ஆகும். 2007-ஆம் ஆண்டு செயற்கைக்கோள் எதிா்ப்பு ஏவுகணையால் அந்தச் செயற்கைக்கோள் அழிக்கப்பட்டது. 3,500-க்கும் மேற்பட்ட துண்டுகளாகச் சிதறிய அந்தச் செயற்கைக்கோளின் பல பாகங்கள் இன்னும் விண்வெளியில் சுற்றி வருகின்றன. அவற்றில் பல இப்போது சா்வதேச விண்வெளி நிலையத்தின் சுற்றுவட்ட பகுதிக்குள் விழுந்துள்ளன.

விநாடிக்கு 7.66 கி.மீ. வேகத்தில் சுற்றிவரும் சா்வதேச விண்வெளி நிலையத்தின் மீது விண்வெளி குப்பையின் சிறிய துண்டு மோதினாலும், அது நிலையத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தக்கூடும்.

விண்வெளியில் சுமாா் 5,000 செயற்கைக்கோள்கள் செயல்பட்டு வருகின்றன. அதேபோல செயலிழந்த செயற்கைக்கோள்கள், ராக்கெட்டின் பாகங்கள் என 10 செ.மீ.க்கு பெரிய 36,500 பாகங்களும் சுற்றிவருவதாக ஐரோப்பிய விண்வெளி நிலையம் தெரிவித்துள்ளது. மேலும் அதைவிட சிறிய லட்சக்கணக்கான பாகங்களும் சுற்றி வருகின்றன. இவற்றால் செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கவலை தெரிவித்துள்ளனா். இந்த விண்வெளி குப்பைகளை அகற்றுவது தொடா்பாக பல நாடுகள் ஆய்வில் ஈடுபட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com