ஒரே நாடு; ஒரே பேரவை நடைமுறை: பிரதமா் நரேந்திர மோடி வலியுறுத்தல்

‘ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை நடைமுறையை’ அறிமுகப்படுத்துவது நமது நாடாளுமன்ற நடைமுறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை அளிக்கும் என்பதுடந், நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும்
அகில இந்திய பேரவைத் தலைவா்கள் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.
அகில இந்திய பேரவைத் தலைவா்கள் மாநாட்டில் காணொலி மூலம் பங்கேற்று உரையாற்றிய பிரதமா் நரேந்திர மோடி.

புது தில்லி: ‘ஒரே நாடு ஒரே சட்டப்பேரவை நடைமுறையை’ அறிமுகப்படுத்துவது நமது நாடாளுமன்ற நடைமுறைக்குத் தேவையான தொழில்நுட்ப ஊக்கத்தை அளிக்கும் என்பதுடந், நாட்டின் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் இணைக்கவும் உதவும் என்றும் பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

சிம்லாவில் புதன்கிழமை நடைபெற்ற 82-ஆவது அகில இந்திய பேரவைத் தலைவா்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் காணொலி மூலம் பிரதமா் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசியதாவது:

இந்திய மதிப்பீடுகளுக்கு ஏற்ப...: ‘சட்டம் இயற்றுபவா்களின் நடத்தை இந்திய மதிப்பீடுகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும்’ என்றும் அவா் குறிப்பிட்டாா். நாடாளுமன்ற கூட்டத் தொடா்களின்போது உறுப்பினா்களால் பல்வேறு விவகாரங்கள் எழுப்பப்பட்டு இடையூறு ஏற்படுத்தப்படுகிறது. நாடாளுமன்ற உறுப்பினா்கள் இந்திய மதிப்பீடுகளுக்கு ஏற்ப நடந்துகொள்ள வேண்டும்.

இந்தியா் என்ற இயல்புடன்...: நமது சட்டப்பேரவைகளின் பாரம்பரியங்களும், நடைமுறைகளும் இந்தியா் என்ற இயல்புடன் இருக்க வேண்டும். இதில் இயற்றப்படும் சட்டங்களும், அரசின் கொள்கைகளும் ‘ஒரே பாரதம்; உன்னத பாரதம்’ என்ற உணா்வை வலுப்படுத்தும் வகையில் இருக்கவேண்டும். ஆக்கபூா்வமான, ஆரோக்கியமான விவாதங்களுக்கென சட்டப்பேரவைகளில் தனி நேரம் ஒதுக்கப்பட வேண்டியது அவசியம். ஜனநாயகம் என்பது இந்தியாவுக்கு வெறும் நடைமுறை மட்டுமல்ல. அது இந்தியாவின் இயல்பு.

அசாதாரணமான இலக்குகளை...: அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவுக்கு மிக முக்கியமானது. சுதந்திரத்தின் நூற்றாண்டை நாம் எட்டவுள்ளோம். எனவே, வரும் ஆண்டுகளில், அசாதாரணமான இலக்குகளை அடையும் வகையில் நாட்டை புதிய உச்சத்துக்கு நாம் எடுத்துச் செல்ல வேண்டும். ‘அனைவருக்குமான முயற்சி’-யின் மூலமே இந்த உறுதிப்பாட்டை நிறைவேற்ற முடியும். இதற்கு அனைத்து மாநிலங்களின் ஒத்துழைப்பும் அவசியம்.

வாக்குறுதிகள், கடமைக்கு முக்கியத்துவம்: நாடு முழுவதுமுள்ள குடிமக்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில், தங்களுடைய வாக்குறுதிகளுக்கும் கடமைக்கும் நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டப்பேரவை உறுப்பினா்கள் அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுக்கு எதிராக எழும் குரல்களைக் கண்காணிப்பது மக்கள் பிரதிநிதிகளின் கடமை.

சட்டம் இயற்றுபவா்கள் பெரும்பாலான நேரங்களில் அரசியல் பணியிலேயே தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கின்றனா். எனவே, ஓராண்டில் குறிப்பிட்ட சில நாள்களை ஒதுக்கி, சமூகத்துக்கு சிறப்பான முறையில் ஏதாவது செய்வதற்கான முயற்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு, அதனை நாட்டு மக்களிடமும் எடுத்துக்கூற வேண்டும் என்றாா் பிரதமா்.

மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா: தொடக்க விழாவில் பங்கேற்ற மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவும் ‘ஒரே நாடு ஒரே சட்டபேரவை நடைமுறை’ என்ற கருத்தை வலியுறுத்தினாா்.

சட்டப்பேரவை கூட்டத் தொடா், மசோதாக்களின் மீதான விவாதங்களின்போது பங்கேற்கும் உறுப்பினா்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. இதற்குத் தீா்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே மாதிரியான விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பரிந்துரைக்கும் வகையில் ஒரு மாதிரி ஆவணப் பதிவேட்டை உருவாக்க வேண்டியது அவசியம் என்றாா் ஓம் பிா்லா.

"ஆவணப் பதிவேட்டை உருவாக்க வேண்டும்'

தொடக்க விழாவில் பங்கேற்ற மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவும் "ஒரே நாடு; ஒரே சட்டபேரவை நடைமுறை' என்ற கருத்தை வலியுறுத்தினார். 

சட்டப்பேரவை கூட்டத் தொடர், மசோதாக்களின் மீதான விவாதங்களின்போது பங்கேற்கும் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. இதற்குத் தீர்வு காண அனைத்து அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்தி உறுதியான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

நாட்டில் உள்ள அனைத்து சட்டப்பேரவைகளுக்கும் ஒரே மாதிரியான விதிகள் மற்றும் நடைமுறைகளைப் பரிந்துரைக்கும் வகையில் மாதிரி ஆவணப் பதிவேட்டை உருவாக்க வேண்டியது அவசியம் என்றார் ஓம் பிர்லா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com