
ராஜஸ்தான் அமைச்சரவையில் அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ளனர்.
நாளை (ஞாயிற்றுக்கிழமை) பஞ்சாப் காங்கிரஸ் கூட்டம் கூடவுள்ள நிலையில், அமைச்சர்கள் முழுவதுமாக ராஜிநாமா செய்துள்ளனர்.
இதுபற்றி மாநில அமைச்சர் பிரதாப் கூறுகையில், "அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்துவிட்டனர். இதுவொரு நடைமுறை. பஞ்சாப் காங்கிரஸ் கூட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது. அனைவரும் அதில் பங்கேற்போம். எங்களுக்கு அங்கு மேற்கொண்டு வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்" என்றார்.
ராஜஸ்தானில் அமைச்சரவை மாற்றம் குறித்து ஏற்கெனவே கோரிக்கைகள் இருந்து வந்தன. மூன்று அமைச்சர்கள் வெள்ளிக்கிழமை ராஜிநாமா செய்தனர். இதனால், ராஜஸ்தான் அமைச்சரவையின் பலம் 21-இல் இருந்து 18 ஆகக் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் இன்று (சனிக்கிழமை) மாலை அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.