திரிபுரா வன்முறை: முதல்வரிடம் அறிக்கை கேட்கும் அமித் ஷா

திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மீதான காவல் துறை தாக்குதல் குறித்து திரிபுரா முதல்வர் பிப்லப் குமாரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவான அறிக்கை கேட்டிருப்பதாக எம்.பி. கல்யான் பானர்ஜி தெரிவித்த
கோப்புப்படம்
கோப்புப்படம்


திரிணமூல் காங்கிரஸ் கட்சியினர் மீதான காவல் துறை தாக்குதல் குறித்து திரிபுரா முதல்வர் பிப்லப் குமாரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விரிவான அறிக்கை கேட்டிருப்பதாக எம்.பி. கல்யான் பானர்ஜி தெரிவித்துள்ளார். 

திரிபுராவில் திரிணமூல் காங்கிரஸ் இளைஞரணித் தலைவர் சயானி கோஷ் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக திரிணமூல் தலைவர்கள் அடங்கிய குழு மத்திய உள்துறை விவகாரங்கள் அலுவலகம் முன்பு தர்னா போராட்டம் நடத்தி, அமித் ஷாவைச் சந்திக்க அனுமதி கோரினர்.

இதன்பிறகு, திரிணமூல் தலைவர்கள் அடங்கிய குழு அமித் ஷாவைச் சந்தித்தது. இந்த சந்திப்புக்குப் பிறகு திரிணமூல் எம்.பி. கல்யான் பானர்ஜி கூறுகையில், "திரிணமூல் தலைவர்கள் கைது செய்யப்பட்டவிதம் மற்றும் எம்.பி.-க்கள் கைது செய்யப்பட்டவிதம் குறித்து அமித் ஷாவிடம் விரிவாக எடுத்துரைத்தோம். திரிபுரா முதல்வரிடம் இதுதொடர்பாக பேசி அறிக்கை கேட்டிருப்பதாக அவர் கூறினார்" என்றார்.   

முன்னதாக, திரிபுரா முதல்வர் பிப்லப் குமார் பங்கேற்ற கூட்டத்தை சீர்குலைக்க முயற்சித்ததாக சயான் கோஷ் கொலை முயற்சி குற்றத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com