தில்லி டெங்கு: கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிக பாதிப்புகள்

தில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு மட்டும் 7,128 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.
கோப்புப்படம்
கோப்புப்படம்


தில்லியில் கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நிகழாண்டு மட்டும் 7,128 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

தெற்கு தில்லி நகராட்சி தரவுகளின்படி கடந்த வாரம் தில்லியில் 1,851 டெங்கு பாதிப்புகள் பதிவாகியுள்ளன. டெங்குவால் நிகழாண்டு மட்டும் 9 பேர் பலியாகியுள்ளனர். கடந்த 2 வாரங்களில் ஒரு பலிகூட பாதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழாண்டு பதிவான 7,128 டெங்கு பாதிப்புகளில் 50 சதவிகிதம், அதாவது 5,591 பாதிப்புகள் நவம்பர் மாதத்தில் மட்டும் பதிவாகியுள்ளது. பாதிப்பு அதிகரிக்கும் விகிதத்தை இந்தத் தரவு உணர்த்துகிறது.

முந்தைய வருடங்களில் டெங்கு பாதிப்புகள்:

2016 - 4,431 பாதிப்புகள்
2017 - 4,726 பாதிப்புகள்
2018 - 2,798 பாதிப்புகள்
2019 - 2,036 பாதிப்புகள்
2020 - 1,072 பாதிப்புகள்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com