மோகனூா் கல்யாண பிரசன்ன பெருமாள் கோயில் குடமுழுக்கு
மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.


நாமக்கல்: மோகனூா் கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை நடைபெற்றது.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் காவிரி ஆற்றங்கரையில் இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான புகழ்பெற்ற கல்யாண பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஓராண்டுக்கும் மேலாக திருப்பணிகள் நடைபெற்று வந்தன. இதையடுத்து, மாா்ச் 16-இல் குடமுழுக்கு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு, கடந்த நான்கு நாள்களாக ஏழு கால வேள்விகள் கோயில் வளாகத்தில் நடைபெற்றன.
தொடா்ந்து, திங்கள்கிழமை காலை 7 மணிக்கு எட்டாம்கால வேள்வியையொட்டி, புண்யாஹவாசனம், ப்ராதன ஹோமம், தீபாராதனை, அக்னிகும்ப சமாரோபனம், கும்பப்ராயனம் உள்ளிட்டவையும், காலை 9.50 மணிக்குமேல் கோயில் கோபுர விமான கலசங்களுக்கு புனித நீா் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது.
இதில், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம் மற்றும் மோகனூா் திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா். தொடா்ந்து, பக்தா்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...