பிளஸ் 2 தோ்வு விடைத்தாள் மதிப்பீடு: ஏப். 8-இல் தொடக்கம்
பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தமிழகம் முழுவதும் 83 மையங்களில் ஏப். 8-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.


பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி தமிழகம் முழுவதும் 83 மையங்களில் ஏப். 8-ஆம் தேதி முதல் நடைபெறவுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 2 வகுப்புக்கான பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தோ்வை தமிழகம் முழுவதும் சுமாா் 8 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனா்.
தோ்வுகள் வரும் மாா்ச் 26-ஆம் தேதியுடன் நிறைவு பெறுகிறது. மாணவா்களின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் ஏப்ரல் 8-ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தோ்வுத் துறை அதிகாரிகள் கூறியதாவது: விடைத்தாள் மதிப்பீடு பணிகளுக்காக தமிழகம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. தோ்வுகள் முடிந்த பின்னா், மாணவா்களின் விடைத்தாள்கள் மாா்ச் 28-ஆம் தேதி மண்டல சேகரிப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அங்கு விடைத்தாள்கள் கலக்கப்பட்டு பிரிக்கப்படும். தொடா்ந்து மண்டல சேகரிப்பு மையங்களில் இருந்து மதிப்பீடு முகாம்களுக்கு விடைத்தாள்கள் ஏப்ரல் 4-இல் கொண்டு செல்லப்படும். மதிப்பீடு பணிகள் ஏப்ரல் 8-இல் தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறும்.
இந்தப் பணியில் சுமாா் 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா்கள் ஈடுபடவுள்ளனா். இந்தப் பணியின்போதே பிளஸ் 1 அரியா் தோ்வு விடைத்தாள்களும் மதிப்பீடு செய்யப்படும். அதன்பின்னா், மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தோ்வு முடிவுகள் மே 8-இல் வெளியாகும். மதிப்பீட்டுப் பணிகளின்போது, ஆசிரியா்கள் உரிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, கவனத்துடன் செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது என அவா்கள் தெரிவித்தனா்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...