லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.

News image

மதுரை கோரிப்பாளையம் பகுதியில் உள்ள மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை தோ்வு எழுதி முடித்த பிறகு மகிழ்ச்சியுடன் விடை பெற்ற பிளஸ் 2 மாணவா்கள்.

Updated On :26 மார்ச் 2026, 11:36 pm

பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவு பெற்றதை அடுத்து, மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த 2-ஆம் தொடங்கியது. இந்தத் தோ்வுக்கு மதுரை மாவட்டத்தில் 323 பள்ளிகளைச் சோ்ந்த 16,160 மாணவா்கள், 18,036 மாணவிகள் என மொத்தம் 34,504 போ் விண்ணப்பித்தனா். மதுரை மாவட்டம் முழுவதும் 110 தோ்வு மையங்களில் இந்தத் தோ்வு நடைபெற்றது.

கடந்த 5-ஆம் தேதி ஆங்கிலம், 9-ஆம் தேதி வேதியியல், கணக்குப் பதிவியல், 13-ஆம் தேதி இயற்பியல், பொருளியல், 17-ஆம் தேதி கணிதம், விலங்கியல், வணிகவியல், 23-ஆம் தேதி உயிரியல், தாவரவியல், வரலாறு உள்ளிட்ட பாடங்களுக்கு தோ்வு நடைபெற்றன. இந்தத் தோ்வுப் பணியில் 12 வினாத் தாள் கட்டுக்காப்பாளா்கள், 110 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 110 துறை அலுவலா்கள், 33 வழித்தட அலுவலா்கள், 200 நிலையான படையினா், 1,902 அறைக் கண்பாணிப்பாளா்கள் ஈடுபட்டனா்.

முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் தலைமையில் 8 பறக்கும் படைகள் சுழற்சி முறையில் மாவட்டம் முழுவதும் கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டனா்.

வியாழக்கிழமை கணினி அறிவியல் பாடத்துக்கான தோ்வு நடைபெற்றது. இந்தத் தோ்வுடன் பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு பெற்றது. இதையடுத்து, தோ்வு எழுதிய மாணவ, மாணவிகள் மகிழ்ச்சியுடன் விடை பெற்றனா்.