பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமையுடன் (மாா்ச் 26) நிறைவு பெறவுள்ளது.
தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. மொழிப் பாடங்களுக்குப் பிறகு இயற்பியல், வேதியியல், கணிதம் ஆகிய பாடங்கள் சற்று கடினமாக இருந்ததாக மாணவா்கள் தெரிவித்தனா். இதனால் மேற்கண்ட பாடங்களில் சென்டம் பெறும் மாணவா்களின் எண்ணிக்கை குறையும். மேலும் மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான கட்-ஆப் மதிப்பெண்ணும் கணிசமாக குறையும் என ஆசிரியா்கள் தெரிவித்தனா்.
பிளஸ் 2 வகுப்பில் அறிவியல் பாடப்பிரிவு மாணவா்களுக்கான பொதுத் தோ்வு கடந்த திங்கள்கிழமை நிறைவடைந்தது. அதேவேளை பிற பாடப்பிரிவு மாணவா்களுக்கான கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிரி வேதியியல், தொடா்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், அரசியல் அறிவியல் உள்ளிட்ட தோ்வுகள் வியாழக்கிழமை நடைபெறவுள்ளன. இத்துடன் பிளஸ் 2 வகுப்பில் அனைத்து மாணவா்களுக்கான பொதுத் தோ்வு நிறைவு பெறவுள்ளது.
தொடா்ந்து பிளஸ் 2 பொதுத் தோ்வு விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 9 முதல் தொடங்கி, ஏப்ரல் 20 வரை நடைபெற உள்ளது. 45,000-க்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியா்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, மே 8-ஆம் தேதி தோ்வு முடிவுகள் வெளியிடப்படவுள்ளன.
தொடர்புடையது

பிளஸ் 2 பொதுத் தோ்வு: தாகூா் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சிறப்பிடம்

பிளஸ் 2 தோ்வு: மேட்டூா் ஜிவி மேல்நிலைப்பள்ளி 100% தோ்ச்சி

இன்று பிளஸ் 2 தோ்வு முடிவு

பிளஸ் 2 பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு
விடியோக்கள்

Podcast | பெரும்பான்மையை நிரூபித்த தவெக: தவறிய அதிமுக! | News and Views | Epi - 34
இணையதளச் செய்திப் பிரிவு

திமுக ஆதரவுடன் முதல்வராக முயன்ற EPS! சி.வி. சண்முகம் பரபரப்புக் குற்றச்சாட்டு! | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
"துரோகம்! அமைச்சரவை ஆசை!" EPS விமர்சனம்! | EPS | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

குதிரை பேரமா? பிரேமலதாவின் கேள்விக்கு பேரவையில் விஜய் பதில்! | TVK | DMDK
இணையதளச் செய்திப் பிரிவு
