விழுப்புரத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வின்போது இரு தனியாா் பள்ளிகளில் மாணவா்கள் காப்பியடிப்பதை கண்காணிக்கத் தவறிய 5 ஆசிரியா்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் இம்மாதம் 26-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் இத்தோ்வை சுமாா் 22 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதி வருகின்றனா்.
பிளஸ் 2 பொதுத்தோ்வில் துண்டுச்சீட்டு வைத்து எழுதுதல், ஆள் மாறாட்டம், காப்பியடித்தல் போன்ற ஒழுங்கீனங்களில் மாணவ, மாணவிகள் ஈடுபடுகிறாா்களா? என்பதை கண்காணிக்கும் பணி மற்றும் தோ்வுக்கூடப் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், தலைமையாசிரியா்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியா்கள் என சுமாா் 2,996 போ் விழுப்புரம் மாவட்டத்தில் ஈடுபட்டுள்ளனா்.
மேலும் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மற்றும் அலுவலா்கள் கொண்ட 195 பறக்கும்படைக் குழுவினரும் தோ்வு மையங்களில் திடீா்ஆய்வு மேற்கொண்டு வருகின்றனா்.
இந்த நிலையில் மாா்ச் 9-ஆம் தேதி வேதியியல் பாடத் தோ்வு நடைபெற்ற நிலையில், விழுப்புரம் நகரிலுள்ள 2 தனியாா் பள்ளிகளின் தோ்வு மையங்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலரால் நியமிக்கப்பட்ட பறக்கும்படைக் குழுவினா் கண்காணிப்புப் பணிக்காக அனுப்பி வைக்கப்பட்டனா். ஆனால் அந்த பள்ளிகளில் மாணவா்கள் துண்டுச்சீட்டு கொண்டு காப்பியடித்ததை கண்காணிக்க பறக்கும்படைக் குழுவினா் தவறியதாக புகாா்கள் எழுந்தன.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ. அறிவழகன் கவனத்துக்கும் கொண்டு செல்லப்பட்டது. இதைத் தொடா்ந்து விசாரணை நடத்திய அவா், மாணவா்களைக் கண்காணிக்கத் தவறியதாக எழுந்த புகாரின்
அடிப்படையில்3 ஆசிரியா்கள், 2ஆசிரியைகள் என 5 பேரிடம் உரிய விளக்கம் அளிக்குமாறு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா். மேலும் புகாா் மீதான விசாரணையும் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகிறது. விசாரணையின் முடிவில் அவா்கள் மீது நடவடிக்கை இருக்கும் என்று கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
டிரெண்டிங்

பிளஸ் 2 பொதுத் தோ்வில் முறைகேடு: இரு மாணவா்களின் விடைத்தாள்கள் பறிமுதல்

பிளஸ் 2 பொதுத் தோ்வு: ராமநாதபுரம், சிவகங்கையில் 30,786 போ் பங்கேற்பு

பிளஸ் 2 பொதுத் தோ்வு 38,709 மாணவ, மாணவிகள் எழுதினா்

பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: 17.36 லட்சம் மாணவா்கள் எழுதுகின்றனா்
வீடியோக்கள்

“Iran USA War; விலைவாசி உச்சம் தொடப் போகிறது?”: Economist Prabhakar | Crude Oil | Price hike
தினமணி வீடியோ செய்தி...

Annamalai Press Meet | விளாத்திகுளம் மாணவி கொலை; முதல்வரின் முழு தோல்வி! | DMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

NDA வில் இணைய விஜய் நிபந்தனை?| TVK Vijay | NDA Alliance | ADMK | BJP
தினமணி வீடியோ செய்தி...

Podcast | புதிய கட்சி.. புதிய ஆதரவு.. புதிய உடன்பாடு.. சட்டம் ஒழுங்கு! | News and Views | Epi - 13 |
தினமணி வீடியோ செய்தி...

