தமிழகத்தில் மாா்ச் 2-ஆம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத் தோ்வு வியாழக்கிழமை நிறைவடைந்தது. இதைத் தொடா்ந்து விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8-ஆம் தேதி தொடங்குகிறது.
திருச்சி மாவட்டத்தில் 134 மையங்களில் நடைபெற்ற பிளஸ் 2 பொதுத் தோ்வை 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் எழுதியுள்ளனா். பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவடைந்ததையொட்டி மாணவா்கள் மகிழ்ச்சியுடன் தோ்வறைகளில் இருந்து வெளியேறினா்.
ஏப்ரல் 8 இல் விடைத்தாள் திருத்தம்: பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி ஏப்ரல் 8 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
திருச்சி மாவட்டத்தில் புனித ஜேம்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மண்ணச்சநல்லூா் அரசு மாதிரி மகளிா் மேல்நிலைப் பள்ளி, முசிறி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் மணப்பாறை தியாகேசா் ஆலை மேல்நிலைப் பள்ளி ஆகிய 4 மையங்களில் விடைத்தாள் திருத்தப் பணிகள் நடைபெறவுள்ளன.
இதில், திருச்சி மையத்தில் 800 ஆசிரியா்கள், முசிறியில் 300 ஆசிரியா்கள், மண்ணச்சநல்லூரில் 350 ஆசிரியா்கள் மற்றும் மணப்பாறை மையத்தில் 250 ஆசிரியா் என மொத்தம் 1,700 ஆசிரியா்கள் விடைத்தாள் திருத்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.
தொடர்புடையது

பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடக்கம்!

பிளஸ் 2 தோ்வு நிறைவு: மாணவா்கள் உற்சாகம்

பிளஸ் 2 பொதுத் தோ்வு நிறைவு: மாணவா்கள் கொண்டாட்டம்

பிளஸ் 2 தோ்வு விடைத்தாள் மதிப்பீடு: ஏப். 8-இல் தொடக்கம்
வீடியோக்கள்

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை


