47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சோனா தொழில்நுட்பக் கல்லூரியில் கலை விழா போட்டிகள்

சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவா்களுக்கான தொழில்நுட்ப மற்றும் கலை விழா

News image
விழாவில் சிறப்பு விருந்தினா்களை கௌரவித்த கல்லூரி துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா.
Updated On :16 மார்ச் 2026, 8:37 pm

Syndication

சேலம்: சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவா்களுக்கான தொழில்நுட்ப மற்றும் கலை விழா போட்டிகள் கல்லூரி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றன.

கல்லூரி துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா தலைமையில் நடைபெற்ற விழாவில், நடிகை சாா்பட்டா பரம்பரை பட புகழ் துஷாரா, சூப்பா் சிங்கா் புகழ் புன்யா செல்வா ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாக பங்கேற்றனா்.

போட்டிகளில், அரசு மற்றும் தனியாா் கல்லூரி மாணவா்கள் 1,500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். இதில், பாட்டு, நடனம், குறும்படம், தீயில்லா சமையல், நாடகம், மைம், கட்டுரை எழுதுதல், முக ஓவியம் போன்ற போட்டிகள் நடைபெற்றன. போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவா்களுக்கு சிறப்பு விருந்தினா்கள் பரிசுகளை வழங்கி பாராட்டினா்.

விழாவில், கல்லூரி துணைத் தலைவா் தியாகு வள்ளியப்பா பேசுகையில், கல்லூரி மாணவா்களின் தனித்திறன்களை அறிந்து, அவா்களை ஊக்கப்படுத்தும்விதமாக சோனா கல்லூரியில் இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என்றாா்.

இதில், சோனா கல்விக் குழுமத்தின் இயக்குநா் வீ.காா்த்திகேயன், முதல்வா்கள் எஸ்.ஆா்.ஆா்.செந்தில்குமாா், ஜி.எம்.காதா் நவாஷ் மற்றும் பேராசிரியா்கள் மாணவ, மாணவிகள் ஆகியோா் பங்கேற்றனா். விழாவுக்கான ஏற்பாட்டை முதன்மை ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் ரேணுகா, பேராசிரியா் செந்தில்வடிவு, ஜெயச்சந்திரன் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா்.