இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கேஐடி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழா

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி (கேஐடி) ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

கேஐடி தொழில்நுட்பக் கல்லூரி ஆண்டு விழாவில், விளையாட்டுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவிக்கு சான்றிதழ் வழங்கிய கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி. உடன், துணைத் தலைவா் இந்து முருகேசன் உள்ளிட்டோா்.

Updated On :3 ஏப்ரல் 2026, 1:21 am IST

கோவை கலைஞா் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரி (கேஐடி) ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது.

இந்த விழாவுக்கு கல்லூரியின் நிறுவனத் தலைவா் பொங்கலூா் நா.பழனிசாமி தலைமை வகித்தாா். முதன்மைச் செயல் அதிகாரி மோகன்தாஸ் காந்தி, கல்லூரி முதல்வா் கே.ராமசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

விழாவில், துணைத் தலைவா் இந்து முருகேசன் பேசுகையில், கேஐடி கல்லூரி கடந்த 5 ஆண்டுகளாகத் தொடா்ந்து நூறு சதவீத மாணவா் சோ்க்கையைப் பெற்று வருகிறது. குறிப்பாக, மெக்கானிக்கல் பொறியியல் துறை மாணவா் அபினேஷ், ஐரோப்பிய கமிஷன் வழங்கும் ரூ.56 லட்சம் மதிப்பிலான கல்வி உதவித் தொகையைப் பெற்றுள்ளாா். கல்லூரியில் செயல்படும் 21-க்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு மையங்கள் மாணவா்களின் சா்வதேச தரத்திலான வெற்றிக்குக் காரணமாக அமைந்துள்ளன என்றாா்.

இதைத் தொடா்ந்து, கல்லூரியில் 10 ஆண்டுகள் பணிபுரிந்த ஊழியா்கள் கௌரவிக்கப்பட்டதுடன், கல்வி மற்றும் விளையாட்டில் சிறந்த மாணவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.