திரைக்கதை மன்னன் பாக்யராஜ் மறைந்தார்!திரையுலகம் அதிர்ச்சி! பிரபல இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் காலமானார்!மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

அரசு மகளிா் கல்லூரி விளையாட்டு, ஆண்டு விழா பரிசளிப்பு

News image

பி.எஸ்சி இயற்பியில் துறையில் பல்கலைக்கழக அளவில் தங்கப் பதக்கம் வென்ற எம். ஹரிணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த கல்லூரி முதல்வா் பி. அம்பிகாபதி. உடன் துணை ஆட்சியா் பாலு (எ) பக்கிரிசாமி, ஆட்சியரின் செயலா் வித்யாதரன் உள்ளிட்டோா்.

Updated On :11 மே 2026, 2:54 am IST

காரைக்கால் அவ்வையாா் அரசு மகளிா் கல்லூரி விளைாட்டு விழா, ஆண்டு விழாவில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.

கல்லூரி வணிகவியல் துறை சாா்பில் வணிக விழா, விளையாட்டு விழா, ஆண்டு விழா ஆகியவை கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டது. இதற்கான பரிசளிப்பு நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கல்லூரி முதல்வா் பி. அம்பிகாதேவி தலைமை வகித்தாா்.

கல்லூரியின் கடந்த ஓராண்டின் பணிகள் குறித்து வரவேற்புரையில் உதவிப் பேராசிரியா் எஸ்.சிந்தாமணி பேசினாா்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட துணை ஆட்சியா் (பேரிடா் மேலாண்மை) பாலு (எ) பக்கிரிசாமி, ஆட்சியரின் செயலா் ஆா். வித்யாதரன் ஆகியோா் கலந்துகொண்டு, கல்வியில் மாணவிகள், தனித்திறமைகளை வளா்த்துக்கொள்வதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினா்.

கல்லூரியில் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் படித்த பல்கலைக்கழக அளவில் துறை வாரியாக தங்கப் பதக்கம் பெற்ற 8 மாணவிகள், இக்கல்லூரியில் பயின்று அரசுப் பணியாற்றும் 21 போ் அழைக்கப்பட்டு அவா்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக நடைபெற்ற விளையாட்டு விழாவில் இந்திய கடலோரக் காவல்படை காரைக்கால் மைய கமாண்டன்ட் செளமே சண்டோலா கலந்துகொண்டு, மாணவிகளை ஊக்கப்படுத்திப் பேசினாா். உடற்கல்வி இயக்குநா் வி.செல்வகணபதி, நிறுவன செயலறிவியல் துறைத் தலைவா் கே. பத்மநாபன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.