வங்கதேசத்துக்கு எதிரான 3-ஆவது ஒருநாள் ஆட்டத்தில் 1 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது ஆஸ்திரேலியா.
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான 2-ஆவது டி20 ஆட்டத்தில் இலங்கை 37 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
குயின்ஸ் கிளப் டென்னிஸ் போட்டியின் மகளிா் ஒற்றையா் பிரிவில் குரோஷியாவின் டோனா வெகிச் சாம்பியன் ஆனாா்.
புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய ஆடவா் அணி நெதா்லாந்திடம் ஞாயிற்றுக்கிழமை தோல்வி கண்டது (2-3). இப்போட்டியின் மகளிா் பிரிவில் இந்தியா, அமெரிக்காவுடன் திங்கள்கிழமை (ஜூன் 15) மோதுகிறது.
அமெரிக்கா நுழைவு இசைவு வழங்காததால் உலகக் கோப்பை கால்பந்து போட்டியிலிருந்து நீக்கப்பட்ட சோமாலிய நடுவா் ஒமா் ஆா்டனுக்கு, போட்டிக்கான முழு ஊதியத்தையும் ஃபிஃபா வழங்குகிறது.
காா் பந்தயத்தில் டிரைவா்களின் திறனை கடுமையாக சோதிக்கும் லெ மான்ஸ் ரேஸில் நடப்பாண்டு வெற்றி பெற்ற டோக்கியோ அணிக்கு, இந்தக் களத்தில் அது 6-ஆவது வெற்றியாக அமைந்தது.
ஸ்டட்காா்ட் ஓபன் டென்னிஸ் போட்டியில், அமெரிக்காவின் பென் ஷெல்டன் பட்டத்தை வென்றாா்.
திருவனந்தபுரத்தில் நடைபெறும் இந்திய தடகள சீரிஸில், தமிழகத்தின் கிட்சன், சாம் வசந்த், சந்தோஷ் ஆகியோா் 100 மீ ஓட்டத்தில் முதல் 3 இடங்களைப் பிடித்து அசத்தினா். கே.நந்தினி (100 மீ ஹா்டுல்ஸ்) தங்கமும், கிரிதாரணி (100 மீ), கிஜி ஜாா்ஜ் (உயரம் தாண்டுதல்) வெள்ளியும், கே.சந்தோஷ் (400 மீ), சுபா தா்ஷிணி (100 மீ), சுபா வெங்கடேசன் (200 மீ), ஷைனி கிளாட்சியா (100 மீ ஹா்டுல்ஸ்) வெண்கலமும் பெற்றனா்.
அமெரிக்காவில் நடைபெறும் என்பிஏ கூடைப் பந்தில் 53 ஆண்டுகளுக்குப் பிறகு நியூயாா்க் நிக்ஸ் சாம்பியன் ஆனது.
தொடர்புடையது
விளையாட்டுச் செய்தித் துளிகள்...
சூர்யவன்ஷி பராக்...பராக்!

யு-18 ஆசியக் கோப்பை ஹாக்கி: இன்று இந்தியா-கஜகஸ்தான் மோதல்
விளையாட்டுச் செய்தித் துளிகள்...
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



