வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

கோவா தேர்தலில் பாஜகவுக்கு உதவுகிறதா திரிணமூல்? காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோவாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. 

News image
கோப்புப்படம்
Updated On :22 நவம்பர் 2021, 2:24 pm

DIN


கோவாவில் அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ளது. இதில் ஆம் ஆத்மி, திரிணமூல் காங்கிரஸும் போட்டியிடுகின்றன. 

இதையொட்டி, பாஜக குறித்து திரிணமூல் மௌனம் காப்பது தொடர்பாக காங்கிரஸ் விமரிசித்துள்ளது. கோவாவுக்கான காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் திங்கள்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார்.

"பாஜகவுக்கு உதவுவதுதான் திரிணமூல் காங்கிரஸின் திட்டம். மற்ற அனைத்துக் கட்சிகளையும் வலுவிழக்கச் செய்து, காங்கிரஸைக் குறிவைக்க வேண்டும் என்பது திரிணமூலின் எண்ணமாக உள்ளது. அவர்கள் ஏன் பாஜகவைக் குறிவைக்கக் கூடாது? அவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகிறது.

ஐபேக்-ஐ நடத்துபவர்களுக்கு வேறு திட்டம் இருக்கிறது. அவர்கள் மம்தா பானர்ஜிக்கே துரோகம் இழைக்கலாம். மம்தா பானர்ஜிக்கு இதெல்லாம் தெரியுமா, தெரியாதா எனத் தெரியவில்லை" என்றார் தினேஷ் குண்டுராவ்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.