
பிரதமர் மோடி
ஒவ்வொரு மாத இறுதி ஞாயிற்றுக்கிழமைகளில் 'மனதின் குரல்' நிகழ்ச்சியின் வாயிலாக பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே உரை நிகழ்த்திவருகிறார்
அந்த வகையில் இன்று 'மனதின் குரல்' நிகழ்ச்சியில் பேசிய மோடி, "ஜலானில் நூன் நதி என்று ஒரு நதி இருந்தது. படிப்படியாக, நதி அழிவின் விளிம்பிற்கு வந்தது. இது அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு நெருக்கடியை உருவாக்கியது.
ஜலான் மக்கள் இந்த ஆண்டு ஒரு குழுவை அமைத்து நதியை மீட்டெடுத்தனர். இது 'அனைவரின் ஆதரவு இருந்தால் அனைவருக்குமான வளர்ச்சியை அடையலாம்' என்பதற்கு ஒரு எடுத்துக்காட்டு.
இதையும் படிக்க | சட்டத்தை இயற்றுபவா்கள் அதன் தாக்கங்களை ஆராய்வது அவசியம்:உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி
இன்று, இந்தியாவில் 1 பில்லியனுக்கும் அதிகமான மதிப்பை கொண்ட 70க்கும் மேற்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் உள்ளன. பல இந்தியர்கள் தங்கள் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மூலம் உலகளாவிய பிரச்னைகளுக்கு தீர்வுகளை வழங்குகிறார்கள்" என்றார்.