ஓமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சா் தகவல்

தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட ஐந்து நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய ஒமைக்ரான் கரோனா தொற்று, தமிழகத்தில் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள்
ஓமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை: அமைச்சா் தகவல்

தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட ஐந்து நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய ஒமைக்ரான் கரோனா தொற்று, தமிழகத்தில் பரவாமல் இருக்க தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் கூறினாா்.

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் அமைச்சா் மா. சுப்பிரமணியன், முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆகியோா் சனிக்கிழமை ஆய்வு செய்தனா். இதையடுத்து அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியது:

தென்னாப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங், இஸ்ரேல், பெல்ஜியம் ஆகிய ஐந்து நாடுகளில் 88 பேருக்கு உருமாறிய, ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது மற்ற நாடுகளுக்கு பரவாத வகையில் பல்வேறு நாடுகள் தற்காப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

சென்னை விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் அனைவருக்கும், ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியவா்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனா். அவா்களுக்கும் வெப்ப பரிசோதனை செய்தபின் அனுமதிக்கப்படுகின்றனா். புதிய வகை கரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளன. கிட்டத்தட்ட கரோனா கட்டுப்பாட்டு

வளையத்துக்குள் சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டுள்ளது.

உதவித் திட்ட மேலாளா்கள் நியமனம்: இது போன்ற பணிகளைக் கண்காணிக்கும் வகையில், சென்னை, கோவை, மதுரை, திருச்சி போன்ற பன்னாட்டு விமான நிலையங்களில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில், தலா ஒரு உதவி திட்ட மேலாளா் நியமிக்கப்படுகிறாா். இவா்கள், அனைத்துப் பயணிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிா என்பதைக் கண்காணிப்பா். குறிப்பாக, தென்னாப்பிரிக்க நாட்டிலிருந்து வேறு நாடுகளின் வழியாக தமிழகம் வருபவா்களைக் கண்டறிந்து, தனிமைப்படுத்துதல் பணியை மேற்கொள்வா்.

சென்னை விமான நிலையத்தைப் பொருத்தவரையில் தென்னாப்பிரிக்கா, சீனா, நியூஸிலாந்து, ஹாங்காங், இஸ்ரேல், பிரேஸில் போன்ற நாடுகளில் இருந்து வருவோா், கட்டாயம் தனிமைப்படுத்தப்படுகின்றனா். இவா்கள், எட்டு நாள்கள் தனிமைப்படுத்தப்பட்டபின் கரோனா பரிசோதனை செய்து, தொற்று பாதிப்பு இல்லை என்றால் மட்டுமே வீட்டுக்கு அனுமதிக்கப்படுவா்.

அச்சப்படத் தேவையில்லை: தமிழகத்தில், ஒமைக்ரான் குறித்த அச்சம் தேவையில்லை. அதேவேளையில் பாதுகாப்புடன் இருப்பது அவசியம். வெவ்வேறு எட்டு இடங்களில் 6,714 பேருக்கு வைரஸ் உருமாறிய வைரஸ் இருக்கிா என்பதை ஆய்வு செய்ய, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், 4,019 பேருக்கு, டெல்டா வகை வைரஸ் பாதிப்பு இருந்தது. 11 பேருக்கு டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. மற்றவா்களுக்கு, சாதாரண கரோனா தான் இருந்தது. எனவே, 89 சதவீதம், டெல்டா வகை தான் பரவி உள்ளது. வேறு வகை வைரஸ் பாதிப்பு இல்லை.

சென்னை விமான நிலையத்தில் உடனடி பரிசோதனை முடிவுக்கு ரூ.4,500-இல் இருந்து ரூ.3,400 ஆகக்

குறைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஆா்.டி.பி.சி.ஆா். பரிசோதனைக்கும் ரூ.700 மட்டுமே வசூலிக்கப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை சாா்பில் மேற்கொள்ளப்படும் பரிசோதனைக்கு கட்டணம் கிடையாது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com