இந்தியாவில் தடுப்பூசி திட்டம் வெற்றிபெற்றதற்கு இதுவே காரணம்: இரண்டாம் அலை குறித்து பிரதமர் மோடி

ஏழை வெளிமாநில தொழிலாளர், முதல் தவணை தடுப்பூசியை தனது சொந்த கிராமத்தில் செலுத்தி கொண்டிருந்தாலும் அடுத்த தவணையை அவர் எங்கு வேலை செய்கிறாரோ அந்த நகரில் செலுத்தி கொள்ளலாம் என மோடி தெரித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நாட்டில் மக்களுக்கு தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிபெற்றதற்கு காரணம் இந்தியாவின் சுய சார்பு கொள்கை என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தடுப்பூசி திட்டத்தின் முதுகெலும்பாக தொழில்நுட்பம் இருக்க வேண்டும் என்பதை தான் உறுதி செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இதுகுறித்து ஓபன் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் விரிவாக பேசிய அவர், "தடுப்பூசியை கண்டுபிடிக்கவில்லை என்றால் என்ன நடந்திருக்கும் என்பதை நீங்கள் கொஞ்சம் யோசித்து பாருங்கள்.

என்ன சூழல் நிலவி இருக்கும்? உலகின் பெரும்பாலான மக்கள் தொகைக்கு கரோனா தடுப்பூசி இன்னும் கிடைக்கவில்லை. இன்று, கரோனா தடுப்பூசி செலுத்துவதில் வெற்றிபெற்றிருக்கிறோம் என்றால் அது சுய சார்பு கொள்கையால்தான்" என்றார்.

கரோனா இரண்டாம் அலையின் போது தடுப்பூசி, மருத்துவமனை படுக்கைகள் பற்றாக்குறை நிலவியதே என கேள்வி எழுப்பியதற்கு, "விமரிசனத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளோம். நாட்டின் வயதுவந்த மக்களில் அறுபத்தொன்பது சதவிகிதம் பேர் குறைந்தபட்சம் ஒரு தவணை கோவிட் -19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 

25 சதவிகிதம் இரண்டு தவணையை எடுத்துள்ளனர் என்று அரசு இந்த வார தொடக்கத்தில் தெரிவித்திருந்தது. டிசம்பர் இறுதிக்குள் அனைத்து தகுதியுள்ள மக்களுக்கும் தடுப்பூசி போடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்" என பதிலளித்தார். 

ஆராயச்சியின் முக்கியத்துவம் குறித்து பேசிய அவர், "ஜெய் ஜவான் (ராணுவ வீரர்கள்), ஜெய் கிசான் (விவசாயிகள்), ஜெய் விக்யான் (விஞ்ஞானம்) என்ற தாரக மந்திரத்திலிருந்து ஜெய் அனுசந்தன் (ஆராய்ச்சி) என்ற தாரக மந்திரத்திற்கு முன்னோக்கி செல்ல வேண்டும் என சில ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற அறிவியல் மாநாட்டில் கூறியிருந்தேன். 

உலகில் எங்கும் தடுப்பூசிக்கு ஒப்புதல் கிடைக்காத சூழலில், ​​தடுப்பூசி இயக்கத்தை 2020 மே மாதத்தில் திட்டமிடத் தொடங்கினோம். முன்பெல்லாம் மக்களுக்கு தடுப்பூசி கிடைக்க பல பத்தாண்டுகளாகிவிடும். எனவே, அப்படி இல்லாமல் தடுப்பூசி திட்டத்தை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்திருந்தோம். இது வேகமாகவும் திறமையாகவும் குறிப்பிட்ட கால அளவில் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல விரும்பினோம்" என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com