பாஜகவுக்கு எந்தெந்த தொகுதிகள்? எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கேரளத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திய முதல் மாவட்டமானது எர்ணாகுளம்!

கேரளத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் மாவட்டம் என்ற சாதனையை எர்ணாகுளம் பெற்றுள்ளது. 

News image

கோப்புப்படம்

Updated On :3 அக்டோபர் 2021, 5:17 am

DIN

கேரளத்தில் 100% முதல் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்ட முதல் மாவட்டம் என்ற சாதனையை எர்ணாகுளம் பெற்றுள்ளது. 

நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி இயக்கத்தைத் தீவிரப்படுத்தும் முயற்சியில் அந்தந்த மாநிலங்கள் ஈடுபட்டுள்ளன. கேரளத்திலும் தற்போது பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் அங்கும் தடுப்பூசி செலுத்தப்படுவது தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. 

இந்நிலையில், கேரளத்தில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு 100% கரோனா முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்ட மாவட்டம் என்ற என்ற பெருமையை எர்ணாகுளம் பெற்றுள்ளது.
 
மாநில தொழில்துறை அமைச்சர் பி.ராஜீவ் இத்தகவலை வெளியிட்டுள்ளார். மேலும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் எர்ணாகுளம் மாவட்டத்தில் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி முடிக்கும் பணியில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

கேரளத்தில் நேற்றைய கரோனா பாதிப்பு 13,217, பலி 121 ஆக பதிவானது. தற்போது அங்கு கரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,41,155 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.