பிரபல தொடரில் நடித்த நடிகர் மரணம்; பிரதமர் மோடி இரங்கல்

அரவிந்த் திரிவேதி மற்றும் கணேஷ்யாம் நாய்க் ஆகிய இரண்டு நடிகர்களின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராமாயணம் தொடரில் ராவணன் கதாப்பாத்திரத்தில் நடித்த அரவிந்த் திரிவேதியின் மறைவுக்கு பல்வேறு தரப்பினர இறங்கல் தெரிவித்துவருகின்றனர். 82 வயதான அரவிந்த் திரிவேதி செவ்வாய்கிழமை இரவு மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். 

அதேபோல், பிரபல இந்தி திரைப்பட மற்றும் டிவி சீரியல் நடிகரான கணேஷ்யாம் நாயக் தனது 77 வது வயதில் கடந்த 3-ம் தேதி உயிரிழந்தார். இந்தாண்டுதான் அவருக்கு புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. பல நாள்களாக, உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை மாலை காலமானார்.

இந்நிலையில், அரவிந்த் திரிவேதி மற்றும் கணேஷ்யாம் நாய்க் ஆகிய இரண்டு நடிகர்களின் மரணத்திற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் ட்விட்டர் பக்கத்தில், "கடந்த சில நாட்களில், தங்கள் திறமை மூலம் மக்களின் மனதை வென்ற இரண்டு திறமையான நடிகர்களை நாம் இழந்துள்ளோம். ’தரக் மஹ்டா கா அல்தோ கஷ்மா’ டிவி நிகழ்ச்சி மற்றும் பல்வேறு கதாப்பாத்திரங்கள் மூலம் கணேஷ்யாம் நாயக் நினைவுக்கொள்ளப்படுவார். அவர் மிகவும் கனிவும், தாழ்மையுடனும் இருந்தார். 

நாம் அரவிந்த் திரிவேதியை இழந்துள்ளோம். அவர் சிறந்த நடிகர் மட்டுமல்ல, அவர் பொதுச்சேவையில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். ராமாயண் தொடரில் நடித்ததற்காக அவர் பல தலைமுறை இந்தியர்களாலும் நினைவில் கொள்ளப்படுவார்.  இரு நடிகர்களின் குடும்பங்களுக்கும், ரசிகர்களுக்கும் ஆழ்ந்த அனுதாபங்கள். அவரின் ஆத்மா அமைதி அடையட்டும்’’ என பதிவிட்டுள்ளார். 

கடந்த 1991 முதல் 1996 வரை, நாடாளுமன்ற உறுப்பினராகவும் அரவிந்த் திரிவேதி பொறுப்பு வகித்துள்ளார். பல பிரபல இந்தி தொடர்களில் நடித்துள்ள அவர், குஜராத்தி படத்திலும் நடத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com