
வீரர்களின் கண்ணைக் கவரும் சாகச நிகழ்வுகள்
விமானப்படை தினத்தை முன்னிட்டு கண்ணைக் கவரும் சாகச நிகழ்வுகளை விமானப்படை வீரர்கள் இன்று நிகழ்த்தினர்.
உத்தரப் பிரதேசம் காசியாபாத் அருகேயுள்ள ஹிண்டன் விமானப்படை தளத்தில் இந்திய விமானப்படையின் 89ஆவது ஆண்டுவிழாவை கொண்டாடி வருகின்றனர்.
இந்த நிகழ்வின்போது, இந்திய விமானப்படைக்கு சொந்தமான விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் விமானப்படை வீரர்கள் சாகச நிகழ்ச்சியை நடத்தினர்.
இந்த நிகழ்வில், முப்படைகளின் தலைமைத் தளபதி விபின் ராவத், ராணுவத் தளபதி எம்.எம்.நரவணே, கடற்படைத் தளபதி கரண்பீர் சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
— Indian Air Force (@IAF_MCC) October 8, 2021