ஆசிரியர்கள் கொலை எதிரொலி: காஷ்மீரில் போராட்டம்

காஷ்மீரில் 2 பள்ளி ஆசிரியர்கள் சுட்டுகொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று பொதுமக்கள் போராட்டதில் ஈடுபட்டனர்.
ஆசிரியர்கள் கொலை எதிரொலி: காஷ்மீரில் போராட்டம்
ஆசிரியர்கள் கொலை எதிரொலி: காஷ்மீரில் போராட்டம்

காஷ்மீரில் 2 பள்ளி ஆசிரியர்கள் சுட்டுகொல்லப்பட்டதைக் கண்டித்து இன்று பொதுமக்கள் போராட்டதில் ஈடுபட்டனர்.

ஜம்மு - காஷ்மீரின் ஸ்ரீநகர் அருகே இட்கா சங்கம் பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் அறையில் நேற்று(அக்-7) காலை ஆசிரியர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.

அப்போது பள்ளிக்குள் புகுந்த இரண்டு தீவிரவாதிகள், தலைமை ஆசிரியர் சுக்விந்தர் கவுர் மற்றும் ஆசிரியர் தீபக் ஆகியோரை அறைக்கு வெளியே அழைத்து வந்து சுட்டுக்கொன்றனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவத்தைக் கண்டித்து அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் போராட்டதில் ஈடுபட்டவர்களில் ஒருவர் , ‘ மிகவும் மனிதத்தன்மையற்ற இச்செயலை செய்தவர்களுக்கு அரசாங்கம் கண்டிப்பாக தண்டனை கொடுக்க வேண்டும்’ எனத் தெரிவித்தார்.

இறந்தவர்களில் ஒருவர் சீக்கியவர் என்பதால் சீக்கிய கூட்டமைப்பும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இத்தாக்குதல் குறித்து மாநில காவல்துறை தலைவர் தில்பாக் சிங் ‘ காஷ்மீரில் பிரிவினையை ஏற்படுத்தவே இம்மாதிரி பொதுமக்கள் மீது வன்முறை நிகழ்த்தப் படுகிறது’ எனத் தெரிவித்தார்.

சமீப காலமாக காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com