நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 18,166 பேருக்கு தொற்று: 23,624 பேர் மீட்கப்பட்டனர்

நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 18,166 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 214 பேர் உயிரிழந்துள்ளனர். 
காய்கறி விற்பனையாளர் ஒருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சுகாதார பணியாளர்.
காய்கறி விற்பனையாளர் ஒருவருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் சுகாதார பணியாளர்.

புதுதில்லி: நாட்டில் கடந்த  24 மணி நேரத்தில் புதிதாக 18,166 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 214 பேர் உயிரிழந்துள்ளனர். அதே நேரத்தில் 23,624 பேர் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளதாக மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.  

மத்திய சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: நாட்டில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 18,166 பேருக்கு புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,39,53,475-ஆக உயா்ந்துள்ளது. 

23,624 தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை மொத்தம் 3,32,71,915 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 2,30,971-ஆக உள்ளது. 

கடந்த 24 மணி நேரத்தில் தொற்று பாதிப்புக்கு 214 பேர் உயிரிழந்தனர். இதனால், மொத்த கரோனா உயிரிழப்பு 4,50,589-ஆக அதிகரித்துள்ளது.  

நாடு முழுவதும் செலுத்தப்பட்டுள்ள கரோனா தடுப்பூசியின் மொத்த எண்ணிக்கை 94,70,10,175 கோடியாக அதிகரித்துள்ளது. 

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் சனிக்கிழமை மட்டும் 66,85,415 பேர் தடுப்பூசிகள் செலுத்தியுள்ளனர் சுகாதாரத்துறை பணியாளர்கள். 

இந்தியாவில் இதுவரை மொத்தம் 58,25,95,693 பரிசோதனைகளும், சனிக்கிழமை மட்டும் 12,83,212 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com