கிராமத்துக்காக மலையையே துளையிட்ட இளைஞர்கள்; மகிழ்ச்சியில் கிராம மக்கள்

நெஞ்சுறுதியும் இருந்தால் மலையையும் மடுவாக்கலாம் என்று சொல்லுவார்கள். ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சுதர்ஷர்பூர் கிராம இளைஞர்கள் அதனை மெய்ப்பித்துள்ளனர்.
கிராமத்துக்காக மலையையே துளையிட்ட இளைஞர்கள்; மகிழ்ச்சியில் கிராம மக்கள்
கிராமத்துக்காக மலையையே துளையிட்ட இளைஞர்கள்; மகிழ்ச்சியில் கிராம மக்கள்


கட்டாக்: ஒரு இலக்கை அடைய எத்தனை தடைகள் வந்தாலும், அது மலையாக இருந்தாலும் ஊக்கமும், நெஞ்சுறுதியும் இருந்தால் மடுவாக்கலாம் என்று சொல்லுவார்கள். ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டத்தில் உள்ள சுதர்ஷர்பூர் கிராம இளைஞர்கள் அதனை மெய்ப்பித்துள்ளனர்.

ஒடிசா மாநிலம் கட்டாக் மாவட்டம் திகிரியா தாலுகாவுக்கு உள்பட்ட சுதர்ஷன்பூர் கிராமத்தைச் சேர்ந்த 40 இளைஞர்கள், தங்களது கிராமக் குளங்களுக்கு மழை நீர் வந்து சேரும் வகையில், ஒரு மலையையே குடைந்து, கால்வாய் வெட்டியுள்ளனர்.

சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவும் 20 அடி ஆழமும் கொண்ட அந்த கிராமத்தின் குளத்தில் தற்போது நீர் நிரம்பி, அங்குள்ள கிராமத்துக்கு மட்டுமல்லாமல், அக்கம் பக்கத்து கிராமங்களுக்கும் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய தாயராகக் காத்திருக்கிறது.

கடந்த ஆண்டு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் கடந்த ஆண்டு 4 லட்சம் ரூபாய் செலவிட்டு இக்கிராமத்துக்கு நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு சீரமைக்கப்பட்டன. ஆனாலும் குளங்களுக்கு போதுமான நீர் வரவில்லை. வறண்டே இருந்தது. 

உடனடியாக களத்தில் குதித்த இளைஞர்கள், மழை நீர் கிராமத்துக்கு வராமல் எங்குச் செல்கிறது என்று ஆராய்ந்தனர். பிரச்னை கண்டறியப்பட்டதும் செப்டம்பர் 25 பணி தொடங்கியது. சுமார் ஒரு கி.மீ. தொலைவுக்கு மலைப் பகுதிக்குள் கால்வாய் வெட்டினோம். பாறைகள், கடுமையான காடுகளுக்குள் சென்று 8 நாள்கள் கடுமையாக உழைத்து கால்வாய் உருவாக்கப்பட்டது.

சோர்ஷ்பால் மலைப் பகுதியைச் சுற்றிலும் சுமார் 150 குடும்பங்களைச் சேர்ந்த 800 பேர் வசிக்கிறோம். அனைவருக்குமே விவசாயம்தான் தொழில்.

தண்ணீர் இல்லாமல் பல தலைமுறைகளாக விவசாயம் பாதிக்கப்பட்டு வந்தது. எனவே, புதிய குளம் ஒன்றைத் தோண்டி, அதற்கு மழை நீர் வந்து சேரும் வகையில் மலையையும் குடைந்து கால்வாய் வெட்டி, தற்போது குளம் முழுக்க தண்ணீர் நிரம்பியுள்ளது. இதன் மூலம் பல கிராமங்கள் பயன்பெறும்.

விரைவில், இந்த குளத்தில் மீன் வளர்ப்புத் திட்டத்தையும் செயல்படுத்தவிருப்பதாகவும் இளைஞர்கள் உற்சாகத்தோடு கூறுகிறார்கள்.

ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்ற வாக்கை நிரூபித்துக் காட்டியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com