திரிபுரா: முதல் ஆக்சிஜன் பூங்கா திறப்பு

திரிபுரா மாநிலத்தின் முதல் ஆக்சிஜன் பூங்காவை அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் கடந்த அக்-11 ஆம் தேதி திறந்து வைத்தார்.
திரிபுரா: முதல் ஆக்சிஜன் பூங்கா திறப்பு
திரிபுரா: முதல் ஆக்சிஜன் பூங்கா திறப்பு

திரிபுரா மாநிலத்தின் முதல் ஆக்சிஜன் பூங்காவை அம்மாநில முதல்வர் பிப்லப் குமார் தேப் கடந்த அக்-11 ஆம் தேதி திறந்து வைத்தார்.

திரிபுரா மாநிலம் அகர்தலாவில் உள்ள சல்பாகனில் 29.6 ஹெக்டர் அளவில் ரூ.1.7 கோடி செலவில் அப்பகுதி மக்கள் ஆரோக்கியமான காற்றை சுவாசிப்பதற்காக ஆக்சிஜன் பூங்கா கட்டப்பட்டிருக்கிறது.

இப்பூங்காவில் 2 கிமீ தூரம் வரை நடக்ககூடிய வகையில் செயற்கைப் பாதை , திறந்த வெளி உடற்பயிற்சிக் கூடம் , குழந்தைகள் விளையாட்டு சாதனங்கள் , பட்டாம்பூச்சி தோட்டம் போன்றவை அமைக்கப்பட்டிருக்கிறது.

அப்பகுதி வனம் சார்ந்து இருப்பதால் வனத்தை சுற்றிப்பார்க்க பழங்குடிகளின் துணையுடன் செல்வதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் அரிய பூச்சிகள் , விலங்கினங்கள் , மூலிகைச் செடிகள் , மரங்கள் போன்றவையும் இருப்பதால்  அப்பூங்கா முழுக்க சுற்றுச்சூழலை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

மேலும் வனத்தை பாதுகாப்பதற்காக சேவையாற்றிய முன்னாள் ஊழியர்களின் நினைவாக ‘வனஊழியர்கள் நினைவகம்’ என்கிற பெயரில் நினைவுக் கட்டடமும் திறக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com