கோவாவில் மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம்: அமித் ஷா உறுதி

மத்தியிலும் மாநிலத்திலும் உள்ள 'இரட்டை என்ஜின்' பாஜக அரசுகள் கோவாவின் வளர்ச்சிக்கு உதவி செய்யும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
அமித் ஷா (கோப்புப்படம்)
அமித் ஷா (கோப்புப்படம்)

அடுத்தாண்டு பிப்ரவிரி மாதம் நடைபெறவுள்ள கோவா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார். 

தெற்கு கோவாவில் உள்ள தர்பந்தோரா கிராமத்தில் தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய அவர், "மாநிலத்தில் அடுத்த தேர்தலில் பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைக்கும். தேர்தலுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. 

மத்தியில் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி நடைபெறும் வரும் நிலையில், மாநிலத்திலும் பாஜக அரசைத் தேர்ந்தெடுக்க கோவா மக்கள் தங்கள் மனதை தயார் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். மத்தியலும் மாநிலத்திலும் உள்ள 'இரட்டை என்ஜின்' பாஜக அரசுகள் கோவாவின் வளர்ச்சிக்கு உதவி செய்யும். நவம்பர் 15ஆம் தேதி முதல், திட்டமிடப்படாத விமான சேவையை தொடங்க பிரதமர் முடிவு செய்திருக்கிறார்" என்றார்.

அடுத்தாண்டு கோவா சட்டப்பேரவை தேர்தலில் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆளும் பாஜக, எதிரக்கட்சியாக உள்ள காங்கிரஸை தவிர்த்து மம்தா தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ், அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி, மகாராஷ்டிராவில் ஆளும் கட்சியாக உள்ள சிவ சேனா ஆகிய பிராந்தி கட்சிகளும் போட்டியிடவுள்ளன. 

கடந்த 2017ஆம் ஆண்டு, 40 சட்டப்பேரவை தொகுதிகளை கொண்ட கோவாவில் காங்கிரஸ் 17 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. இருப்பினும், 13 தொகுதிகளில் வெற்ற பாஜக உள்ளூர் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com